அரக்கு பள்ளத்தாக்கின் முக்கிய சுற்றுலாப் பகுதியான சங்க்டா அருவி, கிழக்கு தொடர்ச்சி மலைகளின் அழகிய குன்றுகள் மீது ஓவியம் போல காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இந்த அருவி சங்க்டா கிராமத்திற்கு வெகு அருகாமையில் அமைந்திருப்பதால் அதன் பெயராலேயே சங்க்டா அருவி என்று அழைக்கப்படுகிறது.
சங்க்டா அருவியை சூழ அமைந்திருக்கும் அடர் வனங்களின் பேரமைதியை குலைக்கின்ற ஒரே பேரொலி அருவியின் ஆர்பரிப்பே அன்றி வேறில்லை. இவ்வாறு அமைதியும், ஆர்பரிப்பும் ஒன்றென திகழும் புதுமையான சங்க்டா அருவியை நோக்கி சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைகடலென வந்து கொண்டே இருக்கிறது.



Click it and Unblock the Notifications