Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அரக்கு பள்ளத்தாக்கு » வானிலை

அரக்கு பள்ளத்தாக்கு வானிலை

அரக்கு பள்ளத்தாக்கில் ஆண்டு முழுவதும் மிதமான வானிலையே நிலவும். இந்த மலைவாசஸ்தலத்திற்கு கோடையில் சுற்றுலா வருவதற்கே பயணிகள் பெரிதும் விரும்புகின்றனர். எனினும் பனிக் காலங்களில் உறையவைக்கும் பனிப்பொழிவின்றி இதமான வெப்பநிலை நிலவுவதால் அரக்கு பள்ளத்தாக்கை சுற்றிப் பார்க்க பனிக் காலங்களே சிறந்தது. ஏனெனில் ஹைக்கிங், டிரெக்கிங், ரேப்பெலிங் (இரண்டு கயிர்களை கொண்டு செங்குத்தான மலையில் இருந்து கீழ் இறங்குதல்) போன்ற சாகச பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதற்கு பனிக் காலங்களே சிறந்த தேர்வாக அமையும்.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை) : அரக்கு பள்ளத்தாக்கின் கோடை கால வெப்பநிலை 30 டிகிரியை என்றுமே தாண்டியதில்லை. இந்த காலங்களில் பகல் நேரங்கள் சூடானதாக இருந்தாலும், மாலை வேளைகளில் இதமான வானிலையே நிலவும்.

மழைக்காலம்

(ஜூன் முதல் செப்டம்பர் வரை) : அரக்கு பள்ளத்தாக்கின் மழை காலங்களில் 25 டிகிரி அளவுக்கு வெப்பம் குறைந்து காணப்படும். இந்த காலங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும்.

குளிர்காலம்

(நவம்பர் முதல் பிப்ரவரி வரை) : அரக்கு பள்ளத்தாக்கின் பனிக் காலங்களில் குறைந்தபட்சம் 20 டிகிரியாகவும், அதிகபட்சமாக 23 டிகிரியுமாக வெப்பநிலை பதிவாகும்.