Search
  • Follow NativePlanet
Share

அர்கீ – குகைகளும் கோயில்களும் நிரம்பிய மலைபூமி

15

ஹிமாச்சல் பிரதேச மாநிலத்திலுள்ள சோலன் மாவட்டத்தில் உள்ள முக்கியமான சுற்றுலாத்தலமே இந்த அக்ரீ. மாவட்டத்திலேயே மிகச்சிறிய நகரமான இது சுற்றுலாப்பயணிகளுக்கு சில மயக்கமூட்டும் விசேட அம்சங்களை அளிக்க காத்திருக்கிறது.

வரலாற்று ரீதியாக இந்த நகரம் புரதான கால பாகல் மலை ராஜ்ஜியத்தின் தலைநகரமாக திகழ்ந்திருக்கிறது. இந்த ராஜ்ஜியம் 1660-65ம் ஆண்டுகளில் ராஜா அஜய் தேவ் என்பவரால் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. சிம்லா நகரத்திலிருந்து 52 கி.மீ தூரத்தில் உள்ள இந்த நகரத்தில் அக்கால ராஜ மஹோன்னதத்தின் சாட்சிகளாக பல சின்னங்கள் வீற்றிருக்கின்றன.

நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் யாத்ரீகர்களை கவர்ந்து இழுக்கும் பல அற்புதமான கோயில்கள் இந்த அர்கீ நகரத்தில் அமைந்துள்ளன. லுட்டுரு மஹாதேவ் கோயில், துர்க்கா கோயில் மற்றும் ஷாக்னி மஹாதேவ் கோயில் ஆகியவை இவற்றில் முக்கியமானவை.

அர்கீயிலிருந்து 4 கி.மீ தூரத்தில் உள்ள லுட்டுரு மஹாதேவ் கோயில் சிவபெருமானுக்காக கட்டப்பட்டிருக்கிறது. முக்கியமான சக்தி பீடமாக கருதப்படும் இக்கோயில் 1621ம் ஆண்டில் பாகல் மன்னரால் கட்டப்பட்டிருக்கிறது.

மேலும், இங்கு ஷிகாரா கோயில்கலை பாணியில் கட்டப்பட்டிருக்கும் துர்க்கா கோயிலையும் பயணிகள் தரிசித்து மகிழலாம். மற்றொரு கோயிலான ஷாக்னி மஹாதேவ் கோயிலானது இப்பகுதியின் இயற்கை அழகுக்காட்சிகளை தரிசிக்க ஏற்றவாறு உயரமான இடத்தில் வீற்றுள்ளது.

அர்கீ கோட்டை மற்றும் அர்கீ அரண்மனை என்று அழைக்கப்படும் முக்கியமான வரலாற்றுச்சின்னங்கள் பாகல் ராஜ வம்சத்தின் பாரம்பரிய பெருமையின் சான்றாக இங்கு அமைந்துள்ளன. ராணா பிருத்வி சிங் மன்னரால் 1695 மற்றும் 1700 ஆண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்டிருக்கும் அர்கீ கோட்டை ராஜபுதன மற்றும் முகலாய கட்டிடக்கலை அம்சங்களை கலந்து கட்டப்பட்டிருக்கிறது.

இந்த கோட்டையில் பஹாரி பாணியில் வரையப்பட்டிருக்கு சுவர் ஓவியங்களை பார்த்து ரசிக்கலாம். இந்த ஓவியங்கள் மலைப்பகுதி மக்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்றன.

அர்கீ அரண்மனையானது 18ம் நூற்றாண்டில் ராணா பிருத்வி சிங் மன்னரால் கட்டப்பட்டிருக்கிறது இமயமலையின் மேற்குப்பகுதியில் வீற்றுள்ள இந்த அரண்மனை ‘கலம்’ எனப்படும் கட்டிடக்கலை அம்சங்களுடன் காட்சியளிக்கிறது.

மேலும், பாக்கலாக், திவான் இ காஸ், குனிஹார் மற்றும் லட்சுமிநாராயண் கோயில் போன்றவையும் அர்கீ நகரத்தில் பார்க்க வேண்டிய அம்சங்களாக அமைந்துள்ளன.

அர்கீ நகரத்துக்கு பயணிகள் விமான மார்க்கம், ரயில் மார்க்கம் மற்றும் சாலை மார்க்கமாக எளிதில் சென்றடையலாம். இதமான இனிமையான பருவநிலை நிலவுவதால் வருடத்தின் எந்த பருவத்திலும் இந்த மலைவாசஸ்தலத்துக்கு பயணம் மேற்கொள்ளலாம்.

அர்கீ சிறப்பு

அர்கீ வானிலை

சிறந்த காலநிலை அர்கீ

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது அர்கீ

  • சாலை வழியாக
    நேரடி பேருந்துகள் அர்கீ நகரத்துக்கு இல்லை என்றாலும் டெல்லியிலிருந்து தரம்பூர் வரை செல்வதற்கு அரசுப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தரம்பூரிலிருந்து 30 கி.மீ தூரத்தில் உள்ள அர்கீ நகரத்துக்கு டாக்ஸிகள் தயாராக கிடைக்கின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    கல்கா ரயில் நிலையம் அர்கீயிலிருந்து 70 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்தியாவின் முக்கிய நகரங்களை இந்த ரயில் நிலையம் இணைக்கிறது. தினசரி பல ரயில்கள் இங்கிருந்து புறப்பட்டு செல்கின்றன. ரயில் நிலையத்திலிருந்து டாக்சிகள் மூலமாக பயணிகள் அர்கீ நகரத்தை அடையலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    ஜுப்பர்ஹட்டி விமான நிலையம் அர்கீ நகரத்திற்கு அருகிலுள்ள விமான நிலையமாக 40 கி.மீ தூரத்தில் உள்ளது. சண்டிகர் விமான நிலையம் மூலமாக இந்த நகருக்கு விஜயம் செய்யலாம். இது 90 கி.மீ தூரத்தில் உள்ளது. இங்கிருந்து சிம்லா, டெல்லி மற்றும் மும்பை போன்ற நகரங்களுக்கு விமான சேவைகள் உள்ளன. விமான நிலையத்திலிருந்து டாக்சிகள் மூலமாக பயணிகள் அர்கீ சுற்றுலாத்தலத்தை அடையலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
23 Apr,Tue
Return On
24 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
23 Apr,Tue
Check Out
24 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
23 Apr,Tue
Return On
24 Apr,Wed