Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அர்கீ » வானிலை

அர்கீ வானிலை

இனிமையான பருவநிலை காரணமாக சுற்றுலாப்பயணிகள் வருடத்தின் எந்த நாளிலும் இந்த அர்கீ நகரத்திற்கு பயணம் மேற்கொள்ளலாம். குறிப்பாக கோடைக்காலம் வெளியில் சுற்றிப்பார்த்து ரசிக்க ஏற்றதாக உள்ளது. மிகக்குளிரான பருவநிலையை விரும்பக்கூடிய பயணிகள் குளிர்காலத்தில் இப்பகுதிக்கு விஜயம் செய்யலாம். இயற்கைக்காட்சிகளை ரசிப்பதற்கு மழைக்காலம் மற்றும் பின் மழைக்காலம் பொருத்தமாக உள்ளது.

கோடைகாலம்

(மார்ச் முதல் ஜூன் வரை) : அர்கீ பகுதியில் மார்ச் மாதத்தில் துவங்கி ஜூன் மாதம் வரை கோடைக்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் சராசரியாக 24°C முதல் 30° C வரை வெப்பநிலையும் காணப்படுகிறது.

மழைக்காலம்

(ஜூலை முதல் நவம்பர் வரை) : அர்கீ பகுதியில் ஜுலை மாதத்தில் துவங்கும் மழைக்காலம் ஆகஸ்ட் மாதம் வரை நீள்கிறது. இக்காலத்தில் ஈரப்பதம் அதிகமாக காணப்படுகிறது. மழைக்காலம் மற்றும் பின்மழைக்காலத்தில் ரம்மியான சூழல் காணப்படுவதோடு வண்ணமயமான மலர்கள் பூத்துக்குலுங்குவதையும் இப்பருவத்தில் பார்த்து ரசிக்க முடியும்.

குளிர்காலம்

(நவம்பர் முதல் பிப்ரவரி வரை) : அர்கீ பகுதியில் நவம்பர் மாதத்தில் குளிர்காலம் துவங்குகிறது. பனிப்பொழிவு காணப்படும் இந்த குளிர்காலம் பிப்ரவரி வரை நீடிக்கிறது. இக்காலத்தில் 0° Cக்கும் கீழே வெப்பநிலை குறைந்து காணப்படுகிறது.