Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஔரங்காபாத் » வானிலை

ஔரங்காபாத் வானிலை

ஔரங்காபாத் வருடம் முழுவதும் மிதமான, இனிமையான பருவநிலையுடன் குறைந்த பட்ச ஈரப்பதச் சூழலுடன் காணப்படுகிறது. குளிர்காலமே இங்கு விஜயம் செய்ய உகந்த காலம் ஆகும். குறிப்பாக அக்டோபர் முதல் மார்ச் வரை உள்ள இடைப்பட்ட காலம் ஔரங்காபாதிற்கு சுற்றுலா செல்ல ஏற்ற காலம் ஆகும்.

கோடைகாலம்

மார்ச்சிலிருந்து மே மாதம் வரை ஔரங்காபாத் பகுதியில் கோடைக்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் வெப்பம் அதிகமாக 37 °C யிலிருந்து 21 °C வரை காணப்படுகிறது. இருப்பினும் அதிகபட்சமாக 42 °C வரை வெப்பநிலை உயரும் என்பதால் கோடைக்காலத்தில் ஔரங்காபாத்திற்கு பயணம் மேற்கொள்வதை சுற்றுலாப்பயணிகள் தவிர்ப்பது நல்லது.

மழைக்காலம்

கோடைக்காலத்தை அடுத்து வரும் மழைக்காலம் ஜுன் மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை நான்கு மாதங்கள் நீடிக்கின்றது. கணிசமான மழைப்பொழிவு இப்பருவ காலம் இப்பகுதியின் வெப்பத்தை விரட்டி அடிக்கின்றது. அது மட்டுமல்லாமல் மழைக்காலம் இப்பகுதியை பசுமையாக மாற்றுகிறது. மழைத்தூறல் உங்களுக்கு ஒரு பொருட்டில்லை என்றால் வெளியில் சுற்றிப்பார்க்க இது உகந்த காலம் எனலாம்.

குளிர்காலம்

குளிர்காலமே ஔரங்காபாத் பகுதியை சுற்றிப்பார்க்க மிகவும் ஏற்ற காலம் என்பது குறிப்பிடத் தக்கது. நவம்பர் மாதத்திலிருந்து பிப்ரவரி மாதம் வரை ஔரங்காபாத் பகுதியில் சீதோஷ்ண நிலை மிக குளுமையானதாக விரும்பத்தக்க விதத்தில் காணப்படுகிறது. இக்காலத்தில் வெப்ப நிலை குறைந்த பட்சம் 10 °C  எனும் அளவுக்கு குறைந்து காணப்படுகிறது.