Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அவந்திப்பூர் » வானிலை

அவந்திப்பூர் வானிலை

இங்கு செல்வதற்கு ஏற்ற காலகட்டம், ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டமாகும். இச்சமயத்தில் சென்றால், சுற்றுலாப் பயணிகள், கடுங்குளிரை தவிர்க்கலாம். அதனால், கோடை மற்றும் மழைக்காலங்களே இங்கு சுற்றிப் பார்க்கச் செல்வதற்கு ஏற்றவையாகும்.

கோடைகாலம்

(மார்ச் முதல் ஜூன் வரை): கோடைகாலம், மார்ச் மாதம் ஆரம்பித்து ஜூன் மாதம் வரை நீடிக்கின்றது. அவந்திப்பூரில், கோடைகால தட்பவெப்பநிலை, இதமாக இருக்கும். அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலைகள் தலா 22° மற்றும் 12° செல்சியஸ் ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள், இக்காலத்தில் அவந்திப்பூருக்கு தாராளமாகச் செல்லலாம்.

மழைக்காலம்

(ஜூலை முதல் அக்டோபர் வரை): மழைக்காலம், ஜூலை மாதம் ஆரம்பித்து அக்டோபர் மாதம் வரை நீடிக்கின்றது. வானிலை, மழைக்காலத்தின் போது மிதமாகவே இருக்குமாதலால், சுற்றுலாப் பயணிகள், ஜூலை முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில், அவந்திப்பூர் செல்வதற்கு திட்டமிடலாம்.

குளிர்காலம்

(நவம்பர் முதல் பிப்ரவரி வரை): குளிர்காலம் ஆரம்பப்பிப்பதைக் குறிக்கும் நவம்பர் மாதத்திலிருந்து, பிப்ரவரி மாதம் வரை, இங்கு குளிர்காலமாகும். குளிர்காலத்தின் போது, அவந்திப்பூர் செல்ல திட்டமிடும் சுற்றுலாப் பயணிகள், கடுங்குளிரை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதிகபட்ச வெப்பநிலை, 10° செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை, 0° செல்சியஸ் ஆகவும் இருக்கும்.