Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அயோத்யா » வானிலை

அயோத்யா வானிலை

வட இந்தியாவில் உள்ள மற்ற இடங்களைப் போல் அயோத்யா வருவதற்கும் சிறந்த நேரமாக நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை பரிந்துரைக்கப்படுகிறது. மற்ற காலக் கட்டத்தில் இங்கு வெப்ப நிலை மிகவும் கடுமையாக இருக்கும். இருப்பினும் அயோத்யா என்பது புகழ் பெற்ற புனிதக ஸ்தலம் என்பதால் வருடம் முழுவதும் பக்தர்கள் இங்கு வருவதுண்டு.

கோடைகாலம்

கோடைக்காலம் இங்கு மார்ச் மாதம் தொடங்கி ஜூன் வரை நீடிக்கும். இந்த பருவத்தில் இங்கு கத்திரி வெயில் கொளுத்தும். வெப்ப நிலை அதிகப்படியாக 47° செல்சியஸ் வரை செல்லும். இக்காலத்தில் வெப்ப நிலை 29° செல்சியஸ் முதல் 47° செல்சியஸ் வரை பதிவாகும்.

மழைக்காலம்

இங்கு மழை ஜூலை முதல் செப்டம்பர் வரை பெய்யும். இந்த பருவத்தில் வெப்ப நிலை ஈரப்பதத்துடன் இருக்கும். அப்போது இந்த பகுதி சேரும் சகதியுமாக காட்சியளிக்கும்.

குளிர்காலம்

குளிர் காலம் டிசம்பர் மாதம் ஆரம்பித்து பிப்ரவரி வரை நீடிக்கும். இந்த காலத்தில் வெப்ப நிலை 10° செல்சியசிற்கு கீழ் செல்வதால் அளவுக்கடந்த குளிர் எடுக்கும். பகல் வேளையில் வெப்ப நிலை 30° செல்சியசிற்கு கீழ் இருப்பதால் இனிமையாக இருக்கும்.