Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பலங்கிர் » வானிலை

பலங்கிர் வானிலை

பலங்கிர் சுற்றுலாவிற்கு அக்டோபர் முதல் நவம்பர் வரையிலான குளிர்காலமே மிகவும் சிறந்த பருவம் ஆகும். இந்த மாதங்களில்  வானிலை குளிர்ந்து மிகவும் இதமான வானிலை நிலவுகிறது. குளிர்காலத்தில் பகல்நேர வெப்பநிலை சுமார் 15 டிகிரி செல்ஸியஸை ஒட்டியே இருக்கின்றது. 

கோடைகாலம்

பலங்கிர் சுமார் 46 டிகிரி செல்ஸியஸ் வரை செல்லும் கடுமையான கோடைகாலத்தை அனுபவிக்கின்றது. மிகுந்த வெப்பமான கோடை வெப்பம் காரணமாக சுற்றுலா பயணிகள் வெப்ப நோய்ககளூக்கு உள்ளாக நேர்வதால் சுற்றுலா பயணிகள்  வெப்பமான கோடை பருவத்தில் இந்த இடத்திற்கு சுற்றுலா செல்வதை தவிர்ப்பது நல்லது. இங்கு மார்ச் மாதத்தில் தொடங்கும் கோடை காலம் மே மாதம் வரை நீடிக்கின்றது.

மழைக்காலம்

இங்கு பருவமழை ஜூன் மாதத்தில் தொடங்கி செப்டம்பர் மாத  இறுதி வரை நீடிக்கின்றது. எனினும், இங்கு அக்டோபர் மாதத்திலும் மழை பொழியும். மழைக்காலத்தில் அடிக்கடி பொழியும் மழையானது கோடையின் தாக்கத்தில் தவித்த மக்களுக்கு மாற்றத்தை அளிக்கிறது. பலங்கிர் பருவமழை காலத்தின் கடும் மழையில் இருந்து மிதமான மழை வரை பெறுகிறது.  பருவமழை காலத்தில் இந்த இடத்த்தில் சராசரி மழை அளவு சுமார் 1216 மிமீ ஆகும்.

குளிர்காலம்

பலங்கிரின் குளிர்காலம் மிகவும் குளிரானது. இங்கு அக்டோபர்  மாத பிற்பகுதி மற்றும் நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் ஆரம்பிக்கும் குளிர்காலம் பிப்ரவரி மாதம் வரை தொடர்கிறது. இங்கு குளிர்காலத்தின் குறைந்த பட்ச வெப்பநிலை சுமார் 3 டிகிரி செல்ஸியஸ் அளவிலேயே உள்ளது. பலங்கிருக்கு சுற்றுலா செல்ல குளிர்காலமே மிகவும் சிறந்த பருவம் ஆகும்.