Search
  • Follow NativePlanet
Share

பலங்கிர் - கம்பீரத்தின் வாசனை இன்னும் இங்கே...!

16

பலங்கிர் வளமான பண்பாட்டு பாரம்பரியத்தை கொண்டுள்ள ஒரு முக்கியமான வர்த்தக நகரம் ஆகும். இந்த இடத்தில் பல பழைய கோயில்கள் மற்றும் வழிபாட்டு தலங்களுடன் காலங்காலமாக வாழ்ந்து வரும் பழங்குடி இன மக்களும் இருக்கின்றார்கள்.

இந்த இடம் இன்னும் அதனுடைய பழைய பெருமை மற்றும் கம்பீரத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. ஏனெனில் இந்த நகரம் சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் உள்ள பட்நகர் சுதேச சமஸ்தானத்தின் தலைநகராக விளங்கியது.

இந்த  இடத்தின் பெயர் இங்குள்ள ஒரு கோட்டையான பல்ராம் கார் என்பதின் நினைவாக ஏற்பட்டது. இந்த பல்ராம் கார் கோட்டையானது 19 வது அரசரான பல்ராம் தியோ என்கிற அரசரால் கட்டப்பட்டது.

பலங்கிர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள்

பலங்கிர் அதனைச் சுற்றியுள்ள அழகான இடங்கள் காரணமாக ஒரு மிகச் சிறந்த சுற்றுலா நகரமாக திகழ்கின்றது. ஜலியா என்பது இங்குள்ள ஒரு காடுகளால் சூழப்பட்ட அழகான கிராமம் ஆகும்.

இந்த இடத்தில் ட்ரெக்கிங் செல்வது வெகு பிரசித்தமான ஒன்று. இந்த கண்ணுக்கினிய கிராமத்தில் வழியாக பாய்ந்து ஓடும் நதியானது இந்த அழகிய சுற்றுலா கிராமத்தை பயணிகளுக்கு மிகவும் பிடித்த ஸ்தலமாக மாற்றியிருக்கின்றது.

ஜலியா கிராமம் பலங்கிர் நகரத்தில் இருந்து சுமார் 57 கி.மீ. தொலைவில் உள்ளது. பலங்கிரில் உள்ள மற்றொரு மிக முக்கியமான சுற்றுலா தலம் இங்குள்ள கைக்ஹை ஆகும்.

கைக்ஹை  மூன்று பக்கங்களிலும் பசுமையான தாவரங்கள் நிறைந்த மலைகள் கொண்ட ஒரு அழகிய பள்ளத்தாக்கு ஆகும். அது மலையேற்ற முகாம் மற்றும் சுற்றுலாவிற்கு உகந்த இடமாகும்.

பலங்கிர் சுற்றுலாவானது இங்குள்ள பட்நகர், ராணிப்பூர், ஜ்ஹரியல், ஸைன்ட்லா, டென்ட்டுலிக்ஹுன்டி, முர்ஸிங்க்  மற்றும் ஜல் மகாதேவ் போன்ற இடங்களுக்கு செல்லாமல் முழுமை அடையாது.

ஸுக்ஹ்டெல் நதியில் முன்மொழியப்பட்ட அணையான லோயர் ஸுக்ஹ்டெல் அணை திட்டம் சுற்றுலா பிரயாணங்களுக்கான ஒரு அழகான இடமாகும்.

பலங்கிர் சுற்றுலாவானது சுற்றுலா பயணிகளை கவரும் பல்வேறு இடங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த நகரத்தில் ஆசிரமங்கள், ஏரிகள், அரண்மனைகள், பூங்காக்கள், கோயில்கள் மற்றும் பல்வேறு மதங்களை சேர்ந்த சன்னதிகளை காணலாம்.

முன்னொரு காலத்தில் பலங்கிர் அரச வம்சத்தவர் வசித்து வந்த ஸைலா அரண்மணை ஒடிசாவில் உள்ள சிறந்த அரண்மனைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

நீங்கள் ஒரு ஆன்மீக அனுபத்தை தேடுகின்றவர் எனில் பலிங்கிர் நகரத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள க்ஹுஜென்பலியில் உள்ள ஆனந்த் நிகேதனுக்கு சென்று வரலாம். இங்குள்ள நூற்றாண்டு பழமையான ராஜேந்திர பார்க் ரோஜாக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ஒடிசாவின் பழமையான ஏரிகள் ஒன்றான கரங்கா கட்டா மிகவும் அழகான சுற்றுலாத்தலம் ஆகும். பலிங்கிர் நகராட்சி வாரியம் இடத்தில் சுற்றுலாவை மேம்படுத்த இங்கு படகு சவாரி  வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த  இடத்தை சுற்றி அழகிய தோட்டங்கள் உள்ளது. இந்த ஏரிக்கு மிக  அருகில் பலிங்கிர் என்கிற துர்கா மந்திர் அமைந்துள்ளது.

மத இடங்கள்

மாதா பட்னேஸ்வரி குடிக்கு அர்பணிக்கப்பட்ட மாதா பட்னேஸ்வரி கோவில் இந்த இடத்தின் பிரதான கோவிலாக கருதப்படுகின்றது. இங்குள்ள கோபால்ஜி கோவில் மற்றும் லக்ஷ்மி நாராயண் கோவில் முறையே பகவான் கிருஷ்ணர் மற்றும் அன்னை லக்ஷ்மிக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோவிலாகும்.

இதைத் தவிர ஹைஸங்கர் கோவில், மா ஷமலேஷ்வரி கோவில், நரஸிங்கா கோவில், சந்தோஷி கோவில், லோக்நாத் பாபா கோவில், ஸீதல மாதா கோவில், பகவத் கோவில், ஜெகன்னாத் கோயில், மெளஸி மா கோயில், ராம்ஜி மந்திர், ஷ்யாமா காளி கோயில், சாய்பாபா கோவில் போன்றவையும் மிக முக்கிய ஆன்மீக தலங்களாக திகழ்கின்றன.

ஜொகிஸ்நட்ரா பலங்கிர் நகரத்தில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்குள்ள ஜோகீஷ்வர் சிவன் கோவில் ஒரு பிரபலமான சுற்றுலா இடமாகும். இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும்  நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

இங்கு ஒரு சன்னி மசூதி டிக்ரபாராவில் உள்ளது. ரோமன் கத்தோலிக்க சர்ச் ருகுடியிலும், புரோட்டஸ்டண்ட் சர்ச் ஆதர்ஷ பாதாவிலும் அமைந்துள்ளது. இந்து மத குஜராத்தி சமூகத்திற்கு சொந்தமன ஜலராம் கோவிலும், சிந்தி சமூகத்தவர்களுக்கான ஜ்ஹுலெலல் கோவிலும் பலிங்கிரில் உள்ளது.

ஷாப்பிங் மற்றும் உணவு வகைகள்

பலங்கிரில் சுற்றிப் பார்ப்பதைத் தவிர்த்து நீங்கள் செய்ய வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. இந்த நகரம், அதன் சம்பால்புரி புடவைகள், ஆடை பொருட்கள் மற்றும் படுக்கை விரிப்புகளுக்கு மிகவும் பிரபலமானது.

இனிப்பை விரும்பும் மக்களுக்காக இங்கு நாக்கில் நீர் ஊறச் செய்யும் லபாங்கலாட்டா, சென்னா காஜா, அரிஸா பிதா மற்றும் சென்னா பேடா போன்றவைகள் கிடைக்கின்றன.

இதைத் தவிர மிகப் பிரபலமான சிற்றுண்டி வகைகளான ச்ஹகுலி பிட்ஹா, பிட்ஹௌ ப்ஹஜா, குல்குலா மற்றும் ச்ஹாஉல் பாரா போன்றவற்றையும் பயணிகள் உண்டு களிக்கலாம்.  

பலங்கிரை பார்க்க சிறந்த நேரம்

பலங்கிரை அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான குளிர்காலத்தில் சுற்றிப்பார்ப்பதே மிகவும் சிறந்தது.

பலங்கிரை எவ்வாறு அடைவது?

பலங்கிரில் உள்ள ரயில் நிலையம், ரயில் மூலமாக வரும் பயணிகளுக்கு பயன்தரக்கூடியதாக இருக்கும். ஒடிசாவில் உள்ள பிற இடங்களில் இருந்து இந்த நகரத்திற்கு மாநில அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த நகரத்தில் விமான நிலையம் இல்லை; அருகில் புபனேஸ்வர் உள்ளது.

பலங்கிர் சிறப்பு

பலங்கிர் வானிலை

சிறந்த காலநிலை பலங்கிர்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது பலங்கிர்

  • சாலை வழியாக
    பலங்கிர் சாலை மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. மாநில அரசுக்கு சொந்தமான பேருந்துகள் பலங்கிருக்கு ஒடிசாவின் மற்ற நகரங்களில் இருந்து இயக்கப்படுகின்றன. ஏசி பேருந்துகள் மற்றும் டாக்ஸிகளும் எளிதாக கிடைக்கின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    ஜ்ஹர்ஸுகுடா-சம்பல்பூர்-டிட்லகார் ரயில் இணைப்பில் வரும் பலங்கிர் ரயில் நிலையம் தென் கிழக்கு ரயில்வேயின் ஒரு முக்கியமான ரயில்வே சந்திப்பாகும். இந்த நகரம் ஒடிசா மாநிலத்தின் பிற நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இதை தவிர்த்து பலங்கிரை இந்தியாவின் முக்கிய நகரங்களுடன் இணைக்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. பயணிகள் வசதிக்காக ஆட்டோக்கள் மற்றும் டாக்சிகள் ரயில் நிலையத்தில் இருந்து கிடைக்கின்றன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    சத்தீஸ்கரில் உள்ள ராய்ப்பூர் விமான நிலையம் பலங்கிருக்கு அருகில் உள்ள விமான நிலையம் ஆகும். இந்த நகருக்கு அருகில் உள்ள ஒடிசா மாநில விமான நிலையம் புபனேஸ்வரில் அமைந்துள்ளது. புபனேஸ்வர் பலங்கிரில் இருந்து சுமார் 321கி.மீ. தொலைவில் உள்ளது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Mar,Fri
Check Out
30 Mar,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat