Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பெங்களூர் » வானிலை

பெங்களூர் வானிலை

பெங்களூருக்கு விஜயம் செய்ய ஏற்ற காலம் அக்டோபரிலிருந்து பிப்ரவரி வரையிலான குளிர்காலம் ஆகும். இருப்பினும் மிதமான வெப்பநிலையை கொண்டிருப்பதால் வருடத்தின் எந்த ஒரு காலத்திலும் பெங்களூருக்கு விஜயம் செய்யலாம்.

கோடைகாலம்

பெங்களூர் நகரம் கோடையில் சில அரிதான வெப்ப நாட்களை தவிர்த்து எப்போதுமே மிதமான வெப்பநிலையுடன் காணப்படுகிறது. மார்ச்சிலிருந்து மே மாதம் வரை இருக்கும் கோடைக்காலம் அவ்வப்போது தலை காட்டும் அதிக வெப்பத்துடன் இருக்கும். பொதுவாக கோடைக்காலத்தில் வெப்பநிலை 20℃ அல்லது 68℉ யிலிருந்து 35℃ அல்லது 95℉ வரை காணப்படும்.

மழைக்காலம்

மே மாதத்தின் இறுதியில் பெங்களூர் தன்  மழைக்காலத்தின் முதல் சாரல்களை அனுபவிக்கிறது. தென் மேற்கு மற்றும் வட கிழக்கு பருவக்காற்றுகள் இரண்டுமே இப்பிரதேசத்தில் வீசுவதால் பெங்களூரின் வெப்பநிலை எப்போதுமே குளுமையாக உள்ளது. ஆகஸ்ட்டிலிருந்து அக்டோபர் வரை பெங்களூர் நகரம் தனக்கான அதிகபட்ச மழையைப் பெறுகிறது. இச்சமயத்தில் வெப்பநிலை 19℃ அல்லது 66.2℉ யிலிருந்து 29℃ அல்லது 84.2℉ வரை காணப்படும்...

குளிர்காலம்

நவம்பரிலிருந்து பிப்ரவரி வரை பெங்களூரில் குளிர்காலம் நிலவுகிறது. குளிர்காலத்தில் பெங்களூரில் வெப்பநிலை வெப்பநிலை 12℃ அல்லது 53℉ யிலிருந்து 29℃ அல்லது 84.2℉ வரை காணப்படும். பெங்களூருக்கு விஜயம் செய்ய இது ஏற்ற பருவ காலமாகும். ஜனவரி மாதத்தில் குளிர் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத் தக்கது.