Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பரான் » வானிலை

பரான் வானிலை

அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி வரையிலான இடைப்பட்ட பருவம் பரான் பிரதேசத்துக்கு சுற்றுலா மேற்கொள்ள உகந்ததாக உள்ளது. இக்காலத்தில் பரான் பிரதேசம் குளுமையான மற்றும் இனிமையான சூழலுடன் காணப்படுகிறது.

கோடைகாலம்

(மார்ச் முதல் ஜூன் வரை): பரான் மாவட்டத்தில் மார்ச் முதல் ஜுன் வரை கோடைக்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் தாங்கமுடியாத கடும் வெப்பமும் வறட்சியும் காணப்படுகிறது. இக்காலத்தில் வெப்பநிலை 20° C முதல் 45° C வரை நிலவுகிறது. கோடைக்காலத்தில் பயணிகள் பரான் மாவட்டத்திற்கு சுற்றுலா மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

மழைக்காலம்

(ஜுலை முதல் செப்டம்பர் வரை): பரான் பிரதேசம் ஜுலை முதல் செப்டம்பர் வரை மழைக்காலத்தைப் பெறுகிறது. சுமாரான மழைப்பொழிவை பெறும் பரான் பகுதி கோடையின் கடுமையை மழைக்காலத்தின் மூலம் சற்றே தணித்துக்கொள்கிறது.

குளிர்காலம்

(அக்டோபர் முதல் பிப்ரவரி வரை): அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி வரை பரான் பிரதேசத்தில் குளிர்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் வெப்பநிலை 10° C முதல் 24° C வரை நிலவுகிறது. குளிர்காலத்தில் பருவநிலை பொதுவாக வறட்சியான சூழலுடன் காணப்படுகிறது. பரான் பிரதேசத்துக்கு விஜயம் செய்ய ஏற்ற பருவமாக கருதப்படும் இக்காலத்தில் உல்லன் ஆடைகளுடன் பயணிகள் செல்வது சிறந்தது.