ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான பருவம் பரோக் சுற்றுலாத்தலத்துக்கு பயணம் மேற்கொள்ள உகந்ததாக உள்ளது. இக்காலத்தில் இதமான இனிமையான சூழல் நிலவுகிறது.
(ஏப்ரல் முதல் ஜூன் வரை) : பரோக் சுற்றுலாத்தலத்தில் ஏப்ரல் முதல் ஜூன் வரை கோடைக்காலம் நிலவுகிறது. இனிமையான சூழல் நிலவும் இக்காலத்தில் அதிகபட்சமாக 23°C வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 10°C வெப்பநிலையும் நிலவுகிறது. ஆகவே கோடைக்காலம் பரோக் நகரத்திற்கு விஜயம் செய்ய மிகவும் உகந்ததாக உள்ளது.
( ஜூலை முதல் செப்டம்பர் வரை) : பரோக் சுற்றுலாத்தலத்தில் ஜூலை முதல் செப்டம்பர் வரையான மழைக்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் சிறிதளவு மழைப்பொழிவையே இப்பகுதி பெறுகிறது. எனவே பரோக் சுற்றுலாப்பிரதேசத்துக்கு விஜயம் செய்து இயற்கைக்காட்சிகளை சுற்றிப்பார்த்து ரசிப்பதற்கு மழைக்காலமும் ஏற்றதாக உள்ளது.
(அக்டோபர் முதல் ஜனவரி வரை) : பரோக் சுற்றுலாத்தலத்தில் அக்டோபர் மாதத்தில் துவங்கும் குளிர்காலம் ஜனவரி வரை நீடிக்கிறது. கடுமையான குளிர் நிலவும் இக்காலத்தில் அதிகபட்சமாக 15°C வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 5°C வெப்பநிலையும் நிலவுகிறது.