Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பஸ்தி » வானிலை

பஸ்தி வானிலை

நவம்பர் மாதம் முதல் மார்ச் வரையிலான பருவமே இந்த நகரத்துக்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது. இக்காலத்தில் பருவநிலை இதமாகவும் இனிமையாகவும் காட்சியளிக்கிறது.

கோடைகாலம்

(மார்ச்  முதல் மே வரை) : பஸ்தி நகரத்தில் மார்ச் முதல் மே வரை கோடைக்காலம் நீடிக்கிறது. மே மாதம்வரையில் நீடிக்கின்றது. இக்காலத்தில் 25°C  துவங்கி அதிகபட்சம் 44°C  வரை வெப்பநிலை செல்லக்கூடும். குறிப்பாக மே மாதத்தில் கடும் உஷ்ணம் இப்பகுதியில் நிலவுகிறது. சில வருடங்களில் ஜூன் மாதத்தின் பாதி வரை கூட கோடைக்காலம் நீடிக்கக்கூடும்.

மழைக்காலம்

(ஜுலை முதல் செப்டம்பர் வரை) : ஜுலை முதல் செப்டம்பர் வரை பஸ்தி நகரத்தில் மழைக்காலம் நீடிக்கிறது. இக்காலத்தில் நகர்ப்பகுதி ஈரமாகவும் சூழலில் ஈரப்பதம் நிரம்பியும் காணப்படும். ஆகஸ்ட் மாதத்தில் இங்கு கடும் மழைப்பொழிவு நிலவுகிறது.

குளிர்காலம்

பஸ்தி நகரத்தில் குளிர்காலத்தின்போது இதமான இனிமையான சூழல் நிலவுகிறது. இக்காலத்தில் 9°C  துவங்கி அதிகபட்சம் 25°C  வரை வெப்பநிலை நிலவுகிறது.