Search
  • Follow NativePlanet
Share

பேக்கல் - சலனமற்ற நீர்ப்பிரவாகத்தின் மத்தியில் ஒரு இன்பச் சுற்றுலா!

38

கேரளாவின் காசர்கோட் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிறிய நகரமான பேக்கல், அமைதியின் இருப்பிடமாய் பள்ளிக்கரா பகுதியில், அரபிக் கடலின் கரையோரத்தில் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.

இந்த நகரில் வலியகுளம் என்ற பெயரில் முன்னொரு காலத்தில் மிகப்பெரிய அரண்மனை ஒன்று இருந்தது. இதன் காரணமாகவே பெரிய அரண்மனை என்ற பொருளில் இந்த நகருக்கு பேக்கல் என்று பெயர் வந்தது.

பேக்கல் நகரம் அதன் விருந்தோம்பல் பண்புக்காக பயணிகளிடையே மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது. அதுவும் இங்கு உள்ளூர்வாசிகளால் தயார் செய்யப்படும் 'பாயசம்' என்றும் நம் அடி நாக்கில் தித்தித்துக்கொண்டே இருக்கும்.

பேக்கல் நகரில் உள்ள கோயில்கள் பல்வேறு குடும்பங்களுக்கு சொந்தமானவை. இந்தக் கோயில்களுக்கு நீங்கள் ஆண்டின் தொடக்கத்திலேயே வந்தால் இப்பகுதிகளில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் தெய்யம் திருவிழாவில் கலந்து கொள்ளலாம்.

பேக்கல் நகரின் வரலாற்றுப் பெருமைக்கு மூல முதல் காரணமாக பேக்கல் கோட்டை விளங்கி வருகிறது. அதுவும் பிரம்மாண்ட அரபிக் கடலின் நீல நீர் பிரவாகத்தின் பின்னணியில் காண்போரை மயக்கும் கொள்ள செய்யும் பேரழகு படைத்தது இந்தக் கோட்டை.

இந்த சரித்திரச் சிறப்பு வாய்ந்த கோட்டை இந்திய தொல்பொருள் துறையினரால் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

அதோடு பேக்கல் கோட்டையின் உள்ளேயே அமைந்திருக்கும் விருந்தினர் மாளிகை கேரள பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் ஹனுமான் கோயிலும், திப்பு சுல்தான் கட்டிய பழைய மசூதியும் பேக்கல் நகரின் இதர முக்கிய சுற்றுலா அம்சங்களாக அறியப்படுகின்றன.

பேக்கல் சிறப்பு

பேக்கல் வானிலை

சிறந்த காலநிலை பேக்கல்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது பேக்கல்

  • சாலை வழியாக
    பேக்கல் நகரிலிருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் மங்களூரும், 78 கிலோமீட்டர் தூரத்தில் கண்ணூரும் அமைந்திருக்கின்றன. அதோடு கேரளாவின் அனைத்து நகரங்களிலிருந்தும் எண்ணற்ற பேருந்துகள் பேக்கல் நகருக்கு இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    பேக்கல் நகரிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் காசர்கோட் மற்றும் கஞ்சன்காட் ரயில் நிலையங்கள் அமைந்திருக்கின்றன. எனவே பயணிகள் இந்த ரயில் நிலையங்களுக்கு வந்து சேர்ந்த பிறகு வாடகை கார்கள் மூலம் எந்த சிரமமுமின்றி பேக்கல் நகரை வந்தடையலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    பேக்கல் நகரின் அருகாமை விமான நிலையமாக 70 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் மங்களூர் விமான நிலையம் அறியப்படுகிறது. இந்த விமான நிலையத்துக்கு நீங்கள் வந்து சேர்ந்த பிறகு வாடகை கார்கள் மூலம் சுலபமாக பேக்கல் நகரை அடையலாம். மேலும் பேக்கல் நகரிலிருந்து 180 கிலோமீட்டர் தொலைவில் கோழிக்கோடு பன்னாட்டு விமான நிலையம் அமைந்திருக்கிறது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Apr,Sat
Return On
21 Apr,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Apr,Sat
Check Out
21 Apr,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Apr,Sat
Return On
21 Apr,Sun