Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பத்ராச்சலம் » வானிலை

பத்ராச்சலம் வானிலை

பத்ராச்சலம் நகரை அக்டோபர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் சுற்றிப் பார்க்கும் அனுபவம் மிகவும் அலாதியானது. அதோடு பத்ராச்சலம் நகருக்கு அதன் பனிக் காலங்களில் சுற்றுலா வரும் பயணிகளில் எண்ணிகையும் கணிசமாகவே உள்ளது.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை) : பத்ராச்சலம் நகரின் கோடை காலங்களில் 40 டிகிரிக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவாகும். எனவே சுட்டெரிக்கும் இந்த கோடை காலத்தில் பத்ராச்சலம் நகருக்கு சுற்றுலா வருவதை பயணிகள் தவிர்ப்பது நல்லது.

மழைக்காலம்

(ஜூன் முதல் அக்டோபர் வரை) : பத்ராச்சலம் நகரின் மழைக் காலங்களில் 32 டிகிரி அளவில் வெப்பநிலை பதிவாகும். இந்தக் காலங்களில் பத்ராச்சலம் நகரில் மிதமான பொழிவு இருப்பதோடு, ஒருசில நேரங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

குளிர்காலம்

(நவம்பர் முதல் பிப்ரவரி வரை) : பத்ராச்சலம் நகரின் பனிக் காலங்களில் 27 டிகிரி அளவில் வெப்பநிலை பதிவாகும். எனினும் ஜனவரி மாதத்தில் கூட பத்ராச்சலத்தில் குளிர்ச்சியை நீங்கள் உணர முடியாது.