பாக்சு நகரின் புகழுக்கு முக்கிய காரணமாக திகழ்ந்து வரும் பாக்சுனாக் கோயில் சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டதாகும். இது கடல் மட்டத்திலிருந்து 1770 அடி உயரத்தில், இடைக்கால கலை மற்றும் கலாச்சாரத்திற்கு மிகச் சிறந்த சாட்சியாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.
இந்த தொன்மை வாய்ந்த கோயில் ஹிந்து மற்றும் 'கூர்க்கா' இனத்தவர்களால் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. இங்கு நிறைய குளங்களையும், 'புலித்தலை' நீரூற்றுகளையும் காண முடியும்.
அதோடு இந்தக் குளங்களின் நீர் பாவங்களை போக்கும் சக்தி உடையது என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. மேலும் பாக்சுனாக் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தெய்வங்கள் வேண்டும் வரங்களை கொடுக்க வல்லதாகவும் உள்ளூர் மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை நிலவுகிறது.



Click it and Unblock the Notifications