Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பாவ்நகர் » வானிலை

பாவ்நகர் வானிலை

பாவ்நகர் ஒரு குறைந்த வெப்பமண்டலம். பாவ்நகர், கோடைக்காலத்தில் வெப்பம் அதிகமாகவும், குளிர்காலத்தில் அதிக குளிராகவும், மழைக்காலத்தில் அதிக மழை பொழியும் இடமாகவும் இருக்கும்.

கோடைகாலம்

மார்ச் முதல் ஜூன் வரை உள்ள கோடைக்காலத்தில் வெப்பம் மிகவும் அதிகமாக இருக்கும். குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியசும், அதிகபட்சம் 40 டிகிரி செல்சியசும் வெப்பம் பதிவாகும். ஜூன் மாதத்தில் வெப்பம் அதிகமாக இருப்பதோடு. சில சமயங்களில் மழைப் பொழிவும் இருக்கும்.

மழைக்காலம்

ஜூன் முதல் செப்டம்பர் பாவ்நகரில் நல்ல மழைப் பொழிவு இருக்கும். இந்த சமயத்தில் நகரமே நீரில் மூழ்கி இருப்பது போல காட்சியளிக்குமாம்.

குளிர்காலம்

அக்டோபர் முதல் பிப்ரவரி வரை இருக்கும் குளிர்காலத்தில், அதிகபட்சமாக 32 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 12 டிகிரி செல்சியசுமாக வெப்பநிலை பதிவாகும். வெப்பம் குறைந்து இதமாக இருக்கும் குளிர்காலத்தில் பாவ்நகருக்கு சுற்றுலாச் செல்வது ஏற்புடையதாக இருக்கும்.