Search
  • Follow NativePlanet
Share

பாவ்நகர் - குஜராத்தின் வர்த்தக நகரம் !

32

குஜராத்தில் இருக்கும் முக்கியமான வர்த்தக நகரங்களில் பாவ்நகரும் ஒன்றாகும். பாவ்நகர் பருத்தி பொருட்கள் தொடர்பான வர்த்தகத்திற்கு புகழ்பெற்றது. இதுமட்டுமல்லாமல், கடல் சார் வர்த்தகம், மதிப்பு மிக்க கற்கள் மற்றும் நகை வியாபாரத்திற்கும் பெயர்பெற்றது பாவ்நகர்.

வரலாறு

1723 ஆம் ஆண்டு, பவ்சின்ஜி கோஹில் என்பவரால் பாவ்நகர் கண்டுபிடிக்கப்பட்டது. மார்வார் எனும் இடத்திலிருந்து வந்த கோஹில் சமுதாயத்தினர், வத்வா எனும் கிராமத்தில் ஒரு மையத்தைத் தொடங்கினர். வத்வா கிராமம் தான் தற்போதைய பாவ்நகரம் ஆகும்.

பாவ்நகரைச் சுற்றிலும் அரணாக அமைந்திருக்கிறது அங்கிருக்கும் கோட்டை. கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக, முக்கிய துறைமுகமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது பாவ்நகர். ஆப்பிரிக்கா,மொசாம்பிக், சான்சிபர், சிங்கப்பூர் மற்றும் வளைகுடாப் பகுதிகளை இந்தத் துறைமுகம் இணைக்கிறது.

பாவ்நகரின் தற்போதைய நிலை

பவ்சின்ஜி பல்வேறு தொழில்களில் சிறப்பாக ஈடுபட்டிருந்தார். அதன் விளைவாக, சிறிய ஊராக இருந்த பாவ்நகர், முக்கியத்துவம் வாய்ந்த நகராக மாறியது.பவ்சின்ஜியைத் தொடர்ந்து வந்தவர்களும், தொழில் மற்றும் வர்த்தகத்திற்கு ஊக்கம் அளித்து வந்தனர்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில்...

19 ஆம் நூற்றாண்டில் பாவ்நகர் ரயில் நிலையம் கட்டப்பட்டது. இந்தியாவில், முதன்முதலாக சொந்தமாக ரயில் நிலையம் கட்டிய பெருமை பாவ்நகரைச் சாரும்.பாவ்நகர் நிர்வாகம், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மேற்கொண்டதால், தற்போது கதியவார் மாகாணத்தின் உயரிய நகரமாகத் திகழ்கிறது பாவ்நகர்.

கலாச்சார நகரம்

கல்வி மற்றும் கலாச்சாரத்தின் மையமாகத் திகழ்கிறது பாவ்நகர். இதனை குஜராத்தின் சன்ஸ்காரி கேந்த்ரா என்றழைப்பர். புகழ்பெற்ற கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களால் பாவ்நகர் அழகிய கலாச்சாரத்த்ற்கு பங்காற்றியுள்ளனர்.

நர்சின் மேத்தா, கங்கா சதி, ஜாவெர்சந்த் மெகானி, கவிகாந்த், கோவர்தன் திரிபாதி போன்ற பல கவிஞர்கள் இக்கலாச்சாரம் வளர முக்கிய பங்காற்றினர் எனலாம்.

பாவ்நகரின் அமைவிடம்

குஜராத்தின் தெற்குப் பகுதியில், கம்பத் வளைகுடாப் பகுதிக்கு மேற்கில், கதியவாரில், கடலோரப் பகுதியில் பாவ்நகர் அமைந்திருக்கிறது. வளைகுடா நாடுகளின் நுழைவு வாயிலாகக் கருதப்படும் கோகா துறைமுகம் பாவ்நகரில் தான் உள்ளது.

வானிலை

கோடைகாலத்தில், பாவ்நகர் அதிக வெப்பம் கொண்ட வறட்சிப் பகுதியாக இருக்கிறது. மழைக்காலத்தில் நல்ல மழை பொழியும் இடமாகவும், குளிர்காலத்தில் இதமான வெப்பம் கொண்டதாகவும் விளங்குகிறது. கடலுக்குஅருகில் அமைந்திருப்பதால், கொஞ்சம் புழுக்கமாக இருக்கும்.

பார்க்க வேண்டிய இடங்கள்

பிரம்ம குண்டம் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னங்கள் இங்கு உள்ளன. சித்தராஜ் ஜெய்சின்ஜியின் காலத்தில் இந்த பிரம்ம குண்டம் அழகுபடுத்தப்பட்டது.

இங்கு, இந்துக் கடவுள்களின் சிலைகள் மற்றும் அதற்கான காரண விளக்கங்கள் போன்றவை அங்கு குறிப்பிடப்பட்டுள்ளன. இங்கிருக்கும் மற்றொரு சிறப்புமிக்க இடம், நிலம்பௌக் அரண்மனையாகும்.

இந்த அரண்மனையில் தான் தற்போதை மகராஜா வசித்து வருகிறார். மேலும், தக்தேஷ்வரர் கோவில், பளிதானா ஜெயின் கோவில், கோபினாத் மகாதேவ் கோவில், கோடியார் கோவில் மற்றும் கங்கா தேவி கோவில் போன்ற பல ஆன்மீக தளங்களும் இங்கு உள்ளன.

பாரம்பரியம் மிக்க இடங்கள்

இங்கு அமைந்திருக்கும் ஒரே பூங்கா, வெளாவடார் ப்ளாக் பக் தேசிய பூங்கா ஆகும். மிகவும் அரிய வகை ப்ளாக் பக் வகை மான்கள், கழுதைப் புலி, ஆண்ட்லோப் மான் வகைகள், நரி மற்றும் குள்ள நரி வகைகள், காட்டுப் பன்றி வகைகள் போன்ற மிருகங்களை இங்கே காணலாம்.

இதுமட்டுமல்லாமல், வேகமாக அழிந்து வரும் விலங்கினங்களான வெள்ளை நாரைகள், ஹவ்புரா பஸ்டர்ட், பள்ளிட் ஹாரியர், சாரஸ் வெள்ளைக் கொக்குகல் போன்ற பறவை வகைகளையும் இங்கு பயணிகள் கண்டு ரசிக்கலாம்.

மேலும் வேட்டையாடும் பறவைகளான, பாம்புக் கழுகள், போனேலிக் கழுகள் போன்ற பல வகைக் கழுகுகளையும் இந்தப் பூங்காவில் முடியும்.

கோகாவிற்கு அருகே அமைந்திருக்கும் தீவும் பிராம் பெட். இந்தத் தீவில், உடைந்த நிலையில் ஒரு கோட்டை உள்ளது. மேலும், பல அரிய உயிரினங்களையும் இங்கு காண முடியும். இயற்கையை விரும்பும் சுற்றுலாப் பயணிகள் பார்க்க வேண்டிய அற்புதமான இடம்.

பாவ்நகருக்கு, கோஹில்வாட் என்ற மற்றொரு பெயரும் உண்டு. கோஹில் இனத்தவர்கள் இங்கு வந்து வர்த்தகம் செய்து இவ்விடத்தைப் பெருமைப்படுத்தியதால் இந்தப் பெயர் வந்ததாக கூறுவர். கோஹில் இனத்தவரின் பாரம்பரியம், பழக்க வழக்கத்தைக் உணர பாவ்நகருக்கு வந்து பாருங்கள்.

பாவ்நகர் சிறப்பு

பாவ்நகர் வானிலை

சிறந்த காலநிலை பாவ்நகர்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது பாவ்நகர்

  • சாலை வழியாக
    அகமதாபாத், வதோதரா மற்றும் சூரத் போன்ற நகரங்களில் இருந்து பாவ்நகர் செல்ல பல்வேறு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்து கட்டணங்கள் சற்றே உயர்வாக இருந்தாலும், சொகுசான பயணம் மேற்கொள்ளலாம். சாதாரண பேருந்துகள் மட்டுமல்லாம், ஏசி பேருந்துகளும் பாவ்நகருக்கு இயக்கப்படுகின்றன. மேலும், ராஜ்கோட் மற்றும் ஜாம்நகரில் இருந்தும் பல்வேறு பேருந்துகள் பாவ்நகருக்கு இயக்கப்பட்டு வருகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    பாவ்நகரில் ரயில் நிலையம் உள்ளது. காக்கினாடா எக்ஸ்பிரஸ் , பாவ்நகர் மும்பை எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்கள் பாவ்நகர் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. இங்கிருந்து, மும்பை மற்றும் அகமதாபாத், சூரத், வதோதரா போன்ற பல்வேறு நகரங்களுக்கு செல்ல ரயில்கள் உள்ளன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    பாவ்நகரில் விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து மும்பை மற்றும் முக்கிய நகரங்களுக்கு விமான மூலமாக செல்லலாம். பாவ்நகரை விரைவில் அடைய, விமானம் மூலம் செல்வது சிறந்தது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
28 Mar,Thu
Return On
29 Mar,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
28 Mar,Thu
Check Out
29 Mar,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
28 Mar,Thu
Return On
29 Mar,Fri