Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பீமாஷங்கர் » வானிலை

பீமாஷங்கர் வானிலை

பொதுவாக பீமாஷங்கர் நகரம்  வெப்பமான கோடைக்காலம் மற்றும் கடுமையான குளிர்காலம் எனும் இயல்பை கொண்டுள்ளது.  அக்டோபர் முதல் பிப்ரவரி வரை உள்ள இடைப்பட்ட காலம், அதாவட்து மழைக்கு பிந்தைய மற்றும் குளிர்காலம் இப்பகுதிக்கு சுற்றுலா மேற்கொள்ள ஏற்றதாக உள்ளது. குடும்பத்துடன் ஊர் சுற்றிப்பார்ப்பதற்கேற்ற சீதோஷ்ணநிலை இக்காலத்தில் நிலவுகிறது.

கோடைகாலம்

பீமாஷங்கர் பகுதியில் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கோடைக்காலம் நீடிக்கின்றது. இக்காலத்தில் மிக அதிக உஷ்ணத்துடன் பீமாஷங்கர் காணப்படுகிறது. அதிகபட்ச வெப்பநிலையாக  40°C வரை காணப்படுகிறது.  அதிக உஷ்ணத்துடன் உள்ள கோடைக்காலத்தை பயணிகள் புறக்கணிப்பது சிறந்தது.

மழைக்காலம்

ஜுன் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் பீமாஷங்கர் பகுதியில் மழைக்காலம் நிலவுகிறது.  இக்காலத்தில் மிதமான  மற்றும் கடுமையான மழையை பீமாஷங்கர் பெறுகிறது. கோடைக்காலத்தின் வெப்பத்தினை தொடர்ந்து குளுமையை பீமாஷங்கர் பிரதேசம் இக்காலத்தில் பெறுகிறது. மழையை விரும்பும் பயணிகள் மழைக்காலத்தில் பீமாஷங்கரருக்கு விஜயம் செய்யலாம்.

குளிர்காலம்

பீமாஷங்கர் பகுதியில் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை குளிர்காலம் நிலவுகிறது. இக்குளிர்காலத்தில் மிகக்குறைந்தபட்ச வெப்பநிலையாக  10°C  வரை காணப்படுகிறது. பகலில் மிதமான குளுமையுடனும் இரவில் மிகக்குளிருடனும் காணப்படுகிறது.