Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பீம்தால் » வானிலை

பீம்தால் வானிலை

பீம்தாலுக்கு சுற்றுலா செல்வதற்கு கோடை காலமே மிகவும் சிறந்த பருவமாகும். இப்பருவம்  நடைபயணம், மலையேற்றம்,  மற்றும் சுற்றுலா இடங்களை பார்வையிடுவதற்கு மிகவும் ஏற்றது. கோடை காலத்தை போலவே முன்பனிக்கலமும்  பீம்தாலை பார்வையிட சிறந்த நேரமாக கருதப்படுகிறது.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை): பீம்தாலின் கோடைகாலம் மார்ச் மாதத்தில் தொடங்கி மே மாதத்தில் முடிவடைகிறது.  கோடையில் பீம்தாலின்  வெப்பநிலை 10 ° C முதல் 27 ° C   வரை வேறுபடுகிறது. பீம்தாலுக்கு சுற்றுலா செல்வதற்கு கோடை காலமே சிறந்தது. இக் காலத்தில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் தங்களுடன் பருத்தி, மற்றும் கம்பளி ஆடைகளை எடுத்து  செல்லமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மழைக்காலம்

(ஜூலை முதல் செப்டம்பர் வரை): இங்கே ஜூலையில் தொடங்கும் பருவமழை செப்டம்பர் வரை நீடிக்கிறது. இந்த பருவழை பார்வையாளர்களுக்கு அள்ள அள்ள குறையாத பசுமையை வாரி வழங்குகிறது. அதிக மழைப்பொழி காரணமாக, இந்த காலத்தில் பீம்தாலுக்கு சுற்றுப்பயணம் செல்வது மிகவும் கடினமான ஒன்றாகும்.

குளிர்காலம்

(நவம்பர் முதல் பிப்ரவரி வரை): நவம்பர் மாதத்தில்  தொடங்கும் குளிர்காலம் பிப்ரவரி வரை நீடிக்கின்றது.  இக்காலத்தின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே -3° C மற்றும் 15 ° C.