Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » போபால் » வானிலை

போபால் வானிலை

செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான மாதங்களே போபால் நகரத்திற்கு சுற்றுலா வர மிகவும் ஏற்ற பருவங்களாகும். அக்டோபர் மாதத்தில் மிகச் சிறப்பான பருவநிலை நிலவுவதால் போபால் நகரத்திற்கு மிகவும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்த மாதத்தில் வருவார்கள். எனினும், இந்த பருவத்தில் மாலை மற்றும் இரவு வேளைகளில் நிலவும் குளிரை சமாளிக்க மென்மையான குளிர்கால ஆடைகளுடன் பயணிப்பது நல்லதாகும்.

கோடைகாலம்

போபாலில் மார்ச் முதல் மே வரையிலான மாதங்கள் வெப்பமானதாக இருக்கும். இந்நாட்களில் வெப்பநிலை சுட்டெறிக்கும் வகையில் 45 டிகிரிகள் வரையில் சென்று விடுவதால், மதிய வேளைகளில் வெளியில் கால் வைப்பதே கொடுமையாக இருக்கும். இந்நாட்களில் சூரிய காய்ச்சாலால் நீங்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதால் இது சுற்றுலாவிற்கு ஏற்ற பருவம் கிடையாது.

மழைக்காலம்

போபாலில் ஜுன் மாதம் தொடங்கும் மழைக்காலம் செப்டம்பர் மாதம் வரையிலும் நீடிக்கும். அக்டோபர் மாதத்தின் தொடக்கம் வரையிலுமே அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருக்கும். இந்நாட்களில் அபரிமிதமான மழைப்பொழிவைப் பெறும் இந்நகரம், மழைத் தண்ணீர் தேங்குவதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடிகளையும் இந்நாட்களில் சந்திக்கும். எனவே, போபால் நகரத்திற்கு மழைக்காலத்தில் சுற்றுலா வருவது சிறந்த அனுபவமாக இருக்காது.

குளிர்காலம்

அக்டோபர் மாதத்தின் முடிவில் போபாலில் தொடங்கும் குளிர்காலம் நவம்பர் மாதத்தின் மத்திய காலம் வரையிலும் மிதமான மற்றும் மகிழ்ச்சியான பருவநிலையைக் கொண்டிருக்கும். அதன் பின் தொடங்கும் பனிப்பொழிவு மற்றும் மூடுபனியின் காரணமாக கடுமையான போக்குவரத்து நெருக்கடிகளும், தொடர்ச்சியாக இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படுவதும் நடக்கும். இந்த வகையான குளிர் பருவநிலை மார்ச் மாதத்தின் மத்திய பகுதி வரையிலும் போபாலில் நீடித்திருக்கும்.