Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » புபனேஷ்வர் » வானிலை

புபனேஷ்வர் வானிலை

புபனேஷ்வர் நகரத்துக்கு விஜயம் செய்ய அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்கள் ஏற்றவையாக உள்ளன. இக்காலத்தில் வெளிச்சுற்றுலாவுக்கேற்ற குளுமையான இனிமையான சூழல் காணப்படுகிறது. குறைந்தபட்சம் 15°C  முதல் 20°C  வரை இக்காலத்தில் வெப்பநிலை நிலவுகிறது.

கோடைகாலம்

புபனேஷ்வர் நகரம் கோடைக்காலத்தில் கடுமையான வெப்பம் மற்றும் ஈரப்பதம் நிரம்பிய சூழலை கொண்டுள்ளது. மார்ச் மாதத்தில் துவங்கும் கோடைக்காலத்தின்போது ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதீத வெப்பம் நிலவுகிறது. இக்காலத்தில் அதிகபட்சமாக 45°C  வரை வெப்பநிலை உயர்ந்து காணப்படுகிறது. எனவே கோடைக்காலத்தில் புபனேஷ்வர் நகருக்கு சுற்றுலா மேற்கொள்வதை தவிர்ப்பது சிறந்தது.

மழைக்காலம்

கோடையின் அதீத வெப்பத்தை தணிக்கும் வகையில் ஜுன் மாதத்திலிருந்து புபனேஷ்வர் நகரில் மழைக்காலம் துவங்குகிறது. இது ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கிறது. மழைக்காலத்தில் அவ்வப்போதைய மழைப்பொழிவை இந்நகரம் பெறுகிறது. வெப்பநிலை 33°C அளவுக்கு குறைந்து காணப்பட்டாலும் இது சுற்றுலாவுக்கு ஏற்ற பருவம் அல்ல. 

குளிர்காலம்

வெப்பமும் இல்லாத அதிக குளிரும் இல்லாத குளிர்கால பருவத்தை புபனேஷ்வர் நகரம் பெற்றுள்ளது. டிசம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை இங்கு குளிர்காலம் நீடிக்கிறது. இக்காலத்தில்குறைந்தபட்ச வெப்பநிலையாக 7°C  வரை நிலவுகிறது.  சுற்றுலாவுக்கேற்ற இனிமையான சூழல் இக்காலத்தில் காணப்படுகிறது.