Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பீஜாப்பூர் » வானிலை

பீஜாப்பூர் வானிலை

அக்டோபரிலிருந்து மார்ச் வரை உள்ள காலமே இங்கு விஜயம் உகந்த காலமாகும். ஜுன் மாதத்திலிருந்து செப்டம்பர் வரையிலான காலத்திலும் இங்கு சிற்றுலாக்களை மேற்கொள்ளலாம்.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை): கோடைக்காலத்தில் பீஜாப்பூரில் மிக கடுமையான உஷ்ணம் காணப்படுகிறது. இது பயணிகளுக்கு அசௌகரியத்தையும் அலுப்பையும் தரக்கூடியது. பகலில் வெப்பநிலை அதிகபட்சமாக 42° C வரை இருக்கும். ஆகவே கோடையில் குறிப்பாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பீஜாப்பூருக்கு விஜயம் செய்வதை தவிர்க்கின்றனர்.

மழைக்காலம்

(ஜுன் முதல் செப்டம்பர் வரை): மழைக்காலத்தின்போது பீஜாப்பூர் பகுதி மிதமான மழைப்பொழிவையே பெறுகிறது. மழைக்காலத்தில் எங்கு திரும்பினாலும் பசுமையுடன் சூழலும் குளிர்ச்சியுடன் காணப்படுவதால் இக்காலத்தில் பீஜாப்பூருக்கு விஜயம் செய்வது சில பயணிகளால் விரும்பப்படுகிறது.

குளிர்காலம்

(நவம்பர் முதல் பிப்ரவரி வரை): பீஜாப்பூரின் சீதோஷணநிலை குளிர்காலத்தில் மிக இனிமையான சூழலுடன் குளிச்சியாக காணப்படுகிறது. அதிகபட்ச வெப்பநிலையாக 30° C மட்டுமே உள்ளது. குறைந்த பட்சமாக 20° C வரையிலும் குறைகிறது. எனவே குளிர்காலமே பெரும்பாலான பயணிகளால் பீஜாப்பூருக்கு விஜயம் செய்யவும் பல்வேறு வரலாற்றுச் சின்னங்களை சுற்றிப்பார்க்கவும் உகந்ததாக கருதப்படுகிறது.