Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பிகானேர் » வானிலை

பிகானேர் வானிலை

அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான இடைப்பட்ட காலம் பிகானேர் நகரத்துக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ள உகந்த பருவமாக கருதப்படுகிறது. ஜுலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் சிறிய பயணமாகவும் பிகானேருக்கு விஜயம் செய்யலாம்.

கோடைகாலம்

(மார்ச் முதல் ஜூன் வரை): பிகானேர் பகுதியில் மார்ச் முதல் ஜூன் வரை கோடைக்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் வெப்பநிலை அதிகபட்சமாக 41.8° C ஆகவும், குறைந்தபட்சமாக 28° C ஆகவும் காணப்படுகிறது.

மழைக்காலம்

(ஜுலை முதல் நவம்பர் வரை): ஜுலை மாதம் முதல் நவம்பர் மாதம் வரை பிகானேர் பகுதியில் மழைக்காலம் நிலவுகிறது. மழைக்காலத்தில் இப்பகுதி சுமார் 26 - 44 செ.மீ மழையை பெறுகிறது. சொற்பமான மழைப்பொழிவு காரணமாக இக்காலத்தில் ஈரப்பதம் மிக அதிகமாக உள்ளது.

குளிர்காலம்

(டிசம்பர் முதல் பிப்ரவரி வரை): டிசம்பர் முதல் பிப்ரவரி வரை பிகானேர் பகுதியில் குளிர்காலம் நிலவுகிறது. அதிகமான வெப்பநிலையாக 23.2° C காணப்படும் இக்காலத்தில் மிகக்குறைவான 5.0° C வரை வெப்பநிலை குறைந்து காணப்படலாம்.