Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பிஷ்ணுபூர் » வானிலை

பிஷ்ணுபூர் வானிலை

பிஷ்ணுபூருக்கு சுற்றுலா செல்ல சிறந்த காலம் எனக் கருதப்படுவது, மழைக்காலம் முடிந்தவுடன் வரும் அக்டோபர் முதல் பிப்ரவரி வரையான காலமாகும். குளிர்காலம் தொடங்குவதால், குளிருக்கு இதமான உடைகளை எடுத்துக்கொள்ளவேண்டும். சுற்றுலாப்பயணிகள் மார்ச் மாதம் வரை தங்கி இருந்தால், அவர்கள் சிறப்பு மிக்க யாவ்ஷாங்க் பண்டிகையினையும் கண்டு கொண்டாடி மகிழலாம்.

கோடைகாலம்

பிஷ்ணுபூரில் கோடைகாலம், வெப்பமாகவும் ஈரப்பதமுள்ளதாகவும் உள்ளது. அதிகமான வெப்பமாக 34-35℃ வரை வெப்பம் பதிவாகிறது. விஷ்ணுபூரை சுற்றிப்பார்க்க இது உகந்த காலமல்ல. மேலும்,  நந்நீர் ஏரியான லோட்டாக் ஏரி மற்றும் கெய்புல் லாம்ஜாவ் தேசியப்பூங்கா ஆகியவற்றைப் பார்வையிட இது சரியான சீசன் அல்ல. எனவே கோடைக்காலங்களில் இங்கு வருவதற்கு திட்டமிடுவதை தவிர்த்துவிடவேண்டும்.

மழைக்காலம்

பிஷ்ணுபூரின் சராசரி ஆண்டு மழை அளவு, 1200-1400 மில்லிமீட்டர் ஆகும். தூசுகள், அழுக்குகள் அனைத்தையும் கழுவி சுத்தமாகிப் பச்சைப்பசேலென்ற இயற்கையை மேலும் புதிதாக்கி, நகரத்தையும் அதனைச் சுற்றிலுமுள்ள பகுதிகளையும்,  அழகாக்கும் மழையானது, மலைகள், குன்றுகள், ஆறுகள் என் அனைத்திற்கும் புத்துயிரூட்டுகிறது.

குளிர்காலம்

குளிர்காலத்தில் மிதமான குளிர் நிலவுகிறது. ஆனாலும் முன்னெச்சரிக்கையுடன், இருப்பது நல்லது. சிலநேரங்களில் வெப்பநிலை 0℃ அளவுக்குக்கூட குறையலாம். ஆனால் எப்போதும் வெப்பநிலையானது 2℃ ஐ சுற்றியே இருக்கும். இந்த காலத்தில் சாலைகளின் தரம் நன்றாக இருக்குமாதலால், இக்காலத்தில் பிஷ்ணுபூருக்கு சுற்றுலா செல்லதிட்டமிடுவது சிறப்பாக இருக்கும்.