Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பி.ஆர் மலைகள் » வானிலை

பி.ஆர் மலைகள் வானிலை

எக்காலத்திலும் இந்த பி.ஆர் மலைக்கு  சுற்றுலாப்பயணம் மேற்கொள்ளலாம் என்றாலும் அக்டோபர் மாதத்திலிருந்து மே மாதம் வரையிலான இடைப்பட்ட காலம் உகந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக கோடைக்காலமான மார்ச், ஏப்ர, மே மாதங்களில் பி.ஆர் மலைக்கு  பயணம் செல்வது சிறந்தது.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை): கோடைக்காலத்தில் பி.ஆர் மலைமிதமான குளுமையான சீதோஷ்ண நிலையை கொண்டுள்ளது. இனிமையான இதமான பருவநிலை காரணமாக பயணிகள் இங்கு கோடைக்காலத்தில் விஜயம் செய்வதை விரும்புகின்றனர். வெப்ப நிலை அதிகபட்சமாக பகலில் 380C யாகவும் இரவில்  200C யாக குறைந்தும் காணப்படுகிறது.

மழைக்காலம்

(ஜுன் முதல் செப்டம்பர் வரை) : மழைக்காலத்தில் பி.ஆர் மலை மிகக்கடுமையான மழைப்பொழிவைப்பெறுகின்றது. இக்காலத்தில் வெளியே ஊர் சுற்றிப்பார்ப்பதும் இயற்கையை ரசிப்பதும் மிக சிரமம் என்பதால் மழைக்காலத்தில் பி.ஆர் மலைக்கு  விஜயம் செய்வதை பயணிகள் பெரும்பாலும் தவிர்க்கின்றனர்.

குளிர்காலம்

(அக்டோபர் முதல் பிப்ரவரி வரை) : குளிர்காலத்தின்போது பி.ஆர் மலையின்  பருவநிலை மிக குளுமையாகவும் இனிமையாகவும் காணப்படுகிறது. இக்காலத்தில் சராசரியாக வெப்ப நிலை 90C முதல் 160C என்ற அளவில் உள்ளது.