கிரிக்கெட் மைதானம், சைல்

கடல் மட்டத்திலிருந்து  2444மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த கிரிக்கெட் மைதானம், உலகிலுள்ள உயரமான கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றாக உள்ளது.

போலோ மைதானமாகவும் விளங்கும் இந்த மைதானமானது, 1893-ம் ஆண்டு பாட்டியாலா மன்னர் புபீந்தர் சிங்கினால் உருவாக்கப்பட்டு இன்றளவும் நன்றாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

பைன் மற்றும் தியோதர் மரங்களால் சூழப்பட்டு பசுமையான சுற்றுச்சூழலுடன் இருக்கும் இந்த மைதானம் சைல் இராணுவப் பள்ளியின் நிர்வாகத்திற்கு உட்பட்டதாக உள்ளது.

Please Wait while comments are loading...