Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சம்பானேர் » வானிலை

சம்பானேர் வானிலை

சம்பானேர் பகுதி எல்லா இந்தியப்பிரதேசங்களையும் போல உஷ்ணமான கோடைக்காலம் மற்றும் மிதமான குளிர்காலம் ஆகியவற்றை கொண்டிருக்கிறது. அலைந்து திரிந்து வரலாற்று சின்னங்களை பார்க்க வேண்டியிருக்கும் என்பதால் கோடைக்காலத்தில் இங்கு பயணம் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. வெயிலின் அசௌகரியம் பயண உற்சாகத்தை நிச்சயம் கெடுத்துவிடும். நன்கு திட்டமிட்டுக்கொண்டு குளுமையான குளிர்காலத்தில் இந்த அற்புத வரலாற்று ஸ்தலத்துக்கு விஜயம் செய்வது நல்லது.

கோடைகாலம்

கோடைக்காலத்தில் சம்பானேர் பகுதி தாங்கிக்கொள்ள முடியாத வெப்பத்துடன் காட்சியளிக்கிறது. அதிகபட்சமாக இக்காலத்தில் 45°C வரை வெப்பநிலை செல்லக்கூடும். சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை 24°C ஆக இருக்கும்.

மழைக்காலம்

தென்மேற்கு பருவ மழை மூலம் சம்பானேர் பகுதி கணிசமான மழைப்பொழிவை பெறுகிறது. ஜுன் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை இங்கு மழைக்காலம் நீடிக்கிறது. இப்பருவத்தை அடுத்து அக்டோபர் மாதத்தில் இப்பகுதியின் வெப்பநிலை குறைய ஆரம்பிக்கிறது.

குளிர்காலம்

டிசம்பர் முதல் பிப்ரவரி வரை சம்பானேர் பகுதி குளிர்காலத்தை பெறுகிறது. இக்காலத்தில் இப்பிரதேசம் இதமான இனிமையான சூழலுடன் காணப்படுகிறது. குளிர்காலத்தில் சராசரியாக வெப்பநிலை 11°C முதல் 31°C வரை காணப்படுகிறது. டிசம்பர் மாதத்தில் அதிகபட்சமான குளிர் காணப்படும்.