Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சம்பவத் » வானிலை

சம்பவத் வானிலை

மழைக்காலம் தவிர சம்பவத்துக்கு எந்நேரமும் வரலாம். இங்கு வர கோடைக்காலம் மற்றும் குளிர் காலம், இரண்டுமே உகந்த காலமே.

கோடைகாலம்

(ஏப்ரல் முதல் ஜூன் வரை): சம்பவத்தில் கோடைக்காலம் ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் வரை நீடிக்கும். இந்நேரத்தில் அதிகபட்ச வெப்ப நிலை 30 டிகிரி செல்சியசாகவும் குறைந்தபட்ச வெப்ப நிலை 20 டிகிரி செல்சியசாகவும் பதிவு செய்யப் பட்டிருக்கிறது.

மழைக்காலம்

(ஜூலை முதல் செப்டம்பர் வரை): மழைக்காலம் ஜூலையிலிருந்து செப்டம்பர் மாதம் வரை இங்கே நீடிக்கும். இந்த காலக்கட்டத்தில் இங்கே பலத்த மழை பெய்வதால் இந்நேரம் இங்கு வருவது நல்லதல்ல.

குளிர்காலம்

(அக்டோபர் முதல் பிப்ரவரி வரை): குளிர் காலம் அக்டோபரில் ஆரம்பித்து பிப்ரவரி வரை இருக்கும். இந்நேரத்தில் அதிகபட்ச வெப்ப நிலை 15 டிகிரி செல்சியசாகவும் குறைந்தபட்ச வெப்ப நிலை 4 டிகிரி செல்சியசாகவும் பதிவு செய்யப்படும்.