Search
  • Follow NativePlanet
Share

சம்பவத் - இறையோடு உறவாடுங்கள்!

13

சம்பவத் என்ற புகழ் பெற்ற சுற்றுலாத்தலம், கடல் மட்டத்திலிருந்து 1615 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது. 1997 ஆம் ஆண்டு தனி மாநகராட்சியாக உருவாகப்பட்ட சம்பவத், இங்குள்ள பல கோவில்களுக்காகவும் ஓவியம் போல் காட்சியளிக்கும் இயற்கை அழகிற்காகவும் புகழ் பெற்று விளங்குகிறது. இந்த இடம் 1613 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளில் நேபாளம், உதம் சிங் நகர் மாநகராட்சி, நைனிடால் மாநகராட்சி மற்றும் அல்மோரா மாநகராட்சி ஆகியவை அமையப்பெற்றிருக்கின்றன. ஆவணங்களின் படி இந்த இடம் சந்த் அரசாங்கத்தின் தலைநகரமாக இருந்தது.

அர்ஜுன் டியோஸ் அரசரின் மகளான சம்பவதியின் பெயராலயே இந்த இடம் இப்பெயரைப் பெற்றது. புராணத்தின் படி, மகாவிஷ்ணு இங்கு கூர்ம அவதாரத்தில் தோன்றினார் என்றும் சொல்லப்படுவதுண்டு.

புகழ் பெற்ற இயற்கை நூலறிஞனும் ஆங்கிலேய வேட்டையனுமான ஜிம் கார்பெட் பல புலிகளை கொன்றதனால் இந்த இடம் புகழ் பெற்றது. தன்னுடைய 'மேன் ஈட்டர்ஸ் ஆப் குமான்" புத்தகத்தில் புலிகளை வேட்டையாடுவதை பற்றி விரிவாக சொல்லியுள்ளார்.

கிரந்டேஷ்வர் மகாதேவ் கோவில், பாலேஷ்வர் கோவில், பூர்ணகிரி கோவில், கவால் தேவ்தா, ஆதித்யா கோவில், சௌமு கோவில் மற்றும் படல் ருத்ரேஷ்வர் போன்றவைகள் தான் சம்பவத்தின் குறிப்பிடத்தக்க சுற்றுலாதலங்கள்.

குமாவோன் வட்டாரத்தின் பண்டைய கட்டிடக் கலையை சுட்டிக் காட்டும் வகையில் அமைந்துள்ளது நாக்நாத் கோவில். இங்கே உள்ள கல் செதுக்கலான "ஏக் ஹாத்தியா கா நௌலா" சுற்றுலாப் பயணிகள் பெரிதும் ஈர்க்கும்.

இதை ஒரே இரவில் செதுக்கியதாக நம்பப்படுகிறது. இங்குள்ள மற்றொரு புகழ் பெற்ற தலம் மாயாவதி ஆஷ்ரம். இது கடல் மட்டத்திலிருந்து 1940 மீட்டர் உயரத்தில் உள்ளது.

சம்பவத்திலிருந்து 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள லோஹாகாட் என்ற வரலாற்று சிறப்பு மிக்க நகரத்தையும் பயணிகள் கண்டு களிக்கலாம். இதன் மதிமயக்கும் அழகை பார்த்து காஷ்மீருக்கு அடுத்து இது தான் இரண்டாவது சொர்க்கம் என்று கூறியுள்ளார் P.பாரன் என்பவர்.

பழமையான கோவில்கள் பலவற்றை கொண்ட இந்த நகரத்துக்கு வருடம் முழுவதும் பல சுற்றுலாப் பயணிகள் வந்துச் செல்கின்றனர். பக்வல் திருவிழாவிற்கு புகழ் பெற்றது பரஹி கோவில்.

இது ரக்ஷா பந்தன் அன்று கொண்டாடப்படும் திருவிழாவாகும். இந்த கோவில் லோஹாகாட்டிலிருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ள தேவிதுராஹ் என்ற இடத்தில் உள்ளது.

காதி பஜார் என்ற கடைவீதி லோஹாகாட்டில் புகழ் பெற்ற ஒரு இடம். இங்கே மற்றொரு பழமையான கோட்டையான பனாசூர் கா கிலா உள்ளது. உள்ளூர் மக்களின் நம்பிக்கையின் படி, பனாசூர் என்ற அரக்கனை கிருஷ்ண பரமாத்மா இங்கே வைத்து தான் சம்ஹாரம் புரிந்தார். இது வரலாற்று இடைக்காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.

நடைப்பயணம் மேற்கொள்ளவும் சம்பவத் சிறந்த இடமாக விளங்குகிறது. சம்பவத்திலிருந்து நடைப்பயணம் மேற்கொள்ள பல பாதைகள் உள்ளன. இந்த பாதைகள் பஞ்சேஷ்வர், லோஹாகாட், வணசூர், தனக்பூர், வியாஸ்துரா, பூர்ணகிரி மற்றும் கண்டேஷ்வர் மன்ச் போன்ற இடங்களில் முடிவடையும்.

சுற்றுலாப் பயணிகள் சம்பவத்திற்கு பித்தோரகர்ஹ் என்ற இடத்தில் உள்ள நைனி சைனி விமான நிலையம் அல்லது பண்ட்நகர் விமான நிலையத்திலிருந்து வாடகை கார்கள் மூலமாக வரலாம்.

சம்பவத்துக்கு மிக அருகில் இருக்கும் இரயில் நிலையம் கத்கோடமில் உள்ளது. இரயில் நிலையத்திலிருந்து சம்பவத்திற்கு வாடகை கார்கள் மூலமாக வரலாம். இந்த இடத்திற்கு அருகில் இருக்கும் நகரங்களிலிருந்து இங்கு வருவதற்கு பேருந்து வசதிகளும் உண்டு. கோடைக்காலமும் குளிர் காலமும் தான் இங்கு சுற்றுலா வருவதற்கு உகுந்த நேரம்.

சம்பவத் சிறப்பு

சம்பவத் வானிலை

சிறந்த காலநிலை சம்பவத்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது சம்பவத்

  • சாலை வழியாக
    சம்பவத்திற்கு பல நகரங்களிலிருந்து பேருந்து சேவைகளும் உள்ளன. இந்த நகரங்களில் நைனிடாலும் அடங்கும். சம்பவத்துக்கு செல்ல குளிர் சாதன சொகுசு மற்றும் சாதாரண பேருந்துகள் பல உள்ளன. பயணிகள் பித்தோரகர்ஹிலிருந்தும் பேருந்துகள் மூலம் சம்பவத்துக்கு வரலாம். அங்கிருந்து சம்பவத் 74 கி.மீ. தொலைவில் உள்ளது.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    சம்பவத்திற்கு மிக அருகில் தனக்பூர் இரயில் நிலையம் அமைந்திருக்கிறது. இது ஒரு சிறிய இரயில் நிலையம். இங்கிருந்து லக்நவ், ஷாஜகான்பூர் மற்றும் பிலிபிட் போன்ற இடங்களுக்கு இரயில் சேவைகள் உள்ளன. பயணிகள் இரயில் சேவைகளை கத்கோடம் இரயில் நிலையம் வரை உபயோகிக்கலாம். பின் அங்கிருந்து சம்பவத்துக்கு வாடகை கார்கள் மூலமாக செல்லலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    பித்தோரகர்ஹ் என்ற இடத்தில் உள்ள நைனி சைனி விமான நிலையம் தான் சம்பவத்திற்கு மிகவும் அருகில் இருக்கும் விமான நிலையம். இது சம்பவத்திலிருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ளது. இதே போல் பண்ட்நகர் விமான நிலையமும் சம்பவத்துக்கு மிக அருகில் உள்ளது. இந்த விமான நிலையங்களிலிருந்து சம்பவத்துக்கு வாடகை கார்கள் மூலமாக வரலாம். வெளிநாட்டு பயணிகள் இந்த விமான நிலையங்களை அடைய சம்பவத்துக்கு அருகில் இருக்கும் சர்வதேச விமான நிலையமான டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Apr,Sat
Return On
21 Apr,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Apr,Sat
Check Out
21 Apr,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Apr,Sat
Return On
21 Apr,Sun