மழைக்காலம் முடிந்து குளிர்காலம் தொடங்கும் நேரத்தில் சண்டேல் வரலாம். மழைக்காலம் இங்கு கடுமையாக இருப்பதால் அப்பொழுது ஏதுவானதாக இருக்காது. கோடைக்காலமும் இங்கு அனுபவிக்க இனிமையாக இல்லை. ஆகவே கதக்கதப்பான ஆடைகளுடன் குளிர்கால ஆரம்பத்தில் சண்டேல் சென்றால் சிறப்பானதாக இருக்கும்.
மார்ச் மாதத்திலிருந்து, மே அல்லது ஜூன் வரை சண்டேலில் கோடைக்காலத்தை அனுபவிக்கலாம். இந்நேரத்தில் இங்கு அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியஸ் பதிவு செய்யப்படுகின்றது. வெப்பநிலை கணிசமாக உயரும் தன்மை இங்குள்ளதால் அணிந்து கொள்வதற்கு ஏதுவான பருத்தி ஆடைகளை கொண்டு வருதல் அவசியம். இப்பருவத்தில் இடியுடன் கூடிய மழையையும் எதிர்பார்க்கலாம்.
ஜூன் முதல் செப்டம்பர் கன மழையின் அனுபவம் இங்குண்டு. இங்கும் இதைச் சுற்றியுள்ள மற்ற இடங்களிலும் வற்றாத மழையைக் காணலாம். இங்கு மழைப் பொழிவு தொடற்சியாக இருப்பதால் எரிச்சல் ஏற்படும் பருவக் காலம் என்பதால் மழைகாலத்தில் இங்கு வர வேண்டாம்.
குளிர்காலங்களில் வெப்பநிலை கணிசமாக குறையும். 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு குறைவாகவும் இங்கு காணலாம். இங்கு உச்ச குளிர்காலம் டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இருக்கின்றது. இங்கு நீண்ட குளிர் காலம் இருப்பதால் குளிருக்கான பாதுகாப்பு அவசியம். பயணம் செய்யும் போது போதுமான கம்பளித் துணிகளை கொண்டு செல்லவும்.