Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சாந்தேரி » வானிலை

சாந்தேரி வானிலை

சாந்தேரிக்கு சுற்றுலா வர மிகவும் ஏற்ற பருவமாக அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்கள் உள்ளன. இந்நாட்களில் நிலவும் மகிழ்ச்சிகரமான பருவநிலையால், இதன் சுற்றுப்புறம் மிகவும் வசதியானதாக மாறிவிடும். பொதுவாகவே இந்நாட்களில் வெப்பநிலை 14 முதல் 25 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கும். எனவே, சாந்தேரிக்கு சுற்றுலா வருவதற்கு இந்த மாதங்கள் தான் சிறந்த பருவங்களாகும்.

கோடைகாலம்

கடுமையான வெப்பத்துடன் கூடிய கோடைக்காலத்தை கொண்டிருக்கும் சாந்தேரியில் கோடைக்கால வெப்பநிலை 46 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கும். சுட்டெறிக்கும் இந்த கோடைக்கால நாட்களில் சுற்றுலாப் பயணிகள் சாந்தேரிக்கு வராமல் இருப்பதே நன்று. இவ்வகையில் சாந்தேரியில் மார்ச் மாதம் தொடங்கும் கோடைக்காலம் மே மாதத்தில் உச்சத்தில் இருக்கும்.

மழைக்காலம்

சாந்தேரியில் ஜுன் மாதத்தின் முதல் வாரத்தில் துவங்கும் மழைக்காலம் ஆகஸ்டு மாதத்தின் இறுதி வரையிலும் அல்லது செப்டம்பர் மாதத்தின் துவக்கம் வரையிலும் நீடித்திருக்கும். கடுமையான கோடை வெப்பத்திற்குப் பின்னர் அவ்வப்பொழுது விடாமல் பெய்து கொண்டிருக்கும் மழையால் இந்த பகுதிமக்கள் சற்றே நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள். மழைக்காலத்தின் போது சாந்தேரி 700 முதல் 1100 மிமீ வரையிலும் மழைப்பொழிவைப் பெறும்.

குளிர்காலம்

சாந்தேரியின் குளிர்காலம் மகிழ்ச்சிகரமான பருவமாக இருக்கும். இங்கு நவம்பர் மாதத்தில் துவங்கும் குளிர்காலம் பிப்ரவரி மாதம் வரையிலும் நீடித்திருக்கும். இந்நாட்களில் மெர்குரியின் அளவு வேகமாகக் குறைந்து, 5 டிகிரி செல்சியஸ் வரையிலும் சென்று விடும். சாந்தேரிக்கு சுற்றுலா வருவதற்கு மிகவும் ஏற்ற காலமாக குளிர்காலம் உள்ளது.