சாவ்ல் நகரின் கோடை காலமான மார்ச் முதல் ஜூலை மாதம் வரையிலான காலங்களில் மிதமான வெப்பநிலையே நிலவும். மிஞ்சினால் அதிகபட்சமாக 35 டிகிரி வரை வெப்பநிலை செல்லும். எனவே சாவ்ல் நகரின் கோடை காலம் சுற்றிப் பார்க்க உகந்ததாகவே இருக்கும்.
சாவ்ல் நகரை அதன் மழைக் காலங்களில் சுற்றிப் பார்பதென்பது ஆரோக்கியமானதாக இருக்கும். அதிலும் மழையை விரும்பும் பயணிகளுக்கு, மிதமான மழை பெய்யும் இந்த காலங்கள் மகிழ்ச்சியூட்டும் பருவமாகவே அமையும்.
சாவ்ல் நகரின் பனிக் காலங்களில் குறைந்த பட்சம் 12 டிகிரியும், அதிகபட்சம் 28 டிகிரியுமாக வெப்ப நிலை நிலவும். இந்த காலங்கள் நவம்பரில் தொடங்கி பிப்ரவரி பாதியில் முடிவடையும்.