Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சிரபுஞ்சி » வானிலை

சிரபுஞ்சி வானிலை

சிரபுஞ்சி செல்லும் பயணம், அங்கு மழைப்பொழிவை ஒரு முறையேனும் அனுபவித்துப் பார்க்காமல் நிறைவடையாது. எனவே, அக்டோபர் மற்றும் மே மாதங்களுக்கு இடைப்பட்ட காலமே சிரபுஞ்சி செல்ல ஏதுவான காலமாகும். இச்சமயத்தில், மழைப்பொழிவு அபரிமிதமாக இல்லாமல் இருப்பதோடு, மிகவும் ரம்மியமாகவும், சுத்தமானதாகவும் இருக்கும். இக்காலத்தின் போது வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ் மற்றும் 30 டிகிரி செல்சியஸுக்கு இடைப்பட்ட நிலையில் இருக்கும்.

கோடைகாலம்

சிரபுஞ்சியில், மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களே கோடைகால மாதங்களாகும். இம்மாதங்களின் போது, ஒருவர் இங்கு எதிர்பார்க்கக்கூடிய அதிக பட்ச வெப்பநிலை சுமார் 25 டிகிரி செல்சியஸாகும். கோடைகாலத்தின் போது மழையின்றி வானம் தெளிவாக இருந்தால், புழுக்கம் அதிகமாக இருக்கும். இக்கோடை கால மாதங்களுள் மே மாதமே ஈரம் நிறைந்த மாதமாகும்.

மழைக்காலம்

சிரபுஞ்சியில் சதா மழை பொழிந்த வண்ணம் இருக்கும். எனினும், கடுமையான மற்றும் தொடர் மழைப்பொழிவுகள் ஜூன் மாதத்திலிருந்து அதிகரித்து செப்டம்பர் வரை இருக்கும். உச்ச மழைக்காலங்களில், சிரபுஞ்சி செல்வது மிகவும் கடினம். ஜூன் மாதமே அதிக பட்ச மழைப்பொழிவைப் பெறுகின்றது. மழைக்காலங்களின் போது, வெப்பநிலைகள் மிகவும் குறைந்து காணப்படும்.

குளிர்காலம்

குளிர்கால மாதங்களின் போது, மழையுடன் சேர்ந்து வெப்பநிலையும் குறையும். நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்கள் மிகவும் குளிருடனும், சுமார் 5 டிகிரி செல்சியஸ் வரை குறைந்த வெப்பநிலைகளுடனும் காணப்படும். என்றாலும், சராசரி வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸைச் சுற்றியே இருக்கும். சற்றே குறைவான மழைப்பொழிவுடன் விளங்கும் இக்காலமே சிரபுஞ்சி செல்வதற்கு உகந்த காலமாகும்.