Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சிதம்பரம் » வானிலை

சிதம்பரம் வானிலை

சிதம்பரம் நகரத்தை சுற்றிப்பார்த்து ரசிக்க  நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான குளிர்காலமே ஏற்றதாக உள்ளது. இம்மாதங்களில் சுற்றுலாவுக்கேற்ற சாதகமான இதமான சூழல் நிலவுகிறது. சராசரியாக 20 டிகிரி அளவில் வெப்பநிலை நிலவும் என்பதால் சுற்றுலாவுக்கு சிரமமே இருக்காது. இக்காலத்தில் பல்வேறு திருவிழாக்களும் நடராஜர் கோயிலில் கொண்டாடப்படுவது கூடுதல் விசேஷம்.  

கோடைகாலம்

(ஏப்ரல் முதல் மே வரை) : சிதம்பரம் நகருக்கு எல்லா காலங்களிலும் சுற்றுலா மேற்கொள்ளலாம் என்று சொல்லும்படியாக மிதமான பருவநிலையே இங்கு ஆண்டு முழுவதும் நிலவுகிறது. இருப்பினும் எல்லா தமிழ்நாட்டு நகரங்களையும் போன்றே கோடைக்காலத்தில் இங்கு பயணம் அவ்வளவு சௌகரியமாக இருக்காது. இருப்பினும் காலை மாலை நேரங்களில் கோயிலை சுற்றிப்பார்த்து மகிழ பருவநிலை ஒரு இடைஞ்சலாக இருக்காது என்றே சொல்லலாம்.

மழைக்காலம்

(ஜூன் பாதி  முதல் செப்டம்பர் வரை) : அதிக மழைப்பொழிவு இல்லாத பட்சத்தில் மழைக்காலத்தில் சிதம்பரம் நகருக்கு விஜயம் செய்வது உகந்ததாகவே இருக்கும். ஜூன் பாதி  முதல் ஆகஸ்ட் வரை நீடிக்கும் மழைக்காலத்தில் பருவக்காற்றுகளின் இயல்பைப்பொறுத்து மழைப்பொழிவு காணப்படும். வடகிழக்கு பருவக்காற்றுகள் காரணமாக அக்டோபர், நவம்பர் மாதங்களிலும் மழைப்பொழிவு இருக்கக்கூடும்.

குளிர்காலம்

(நவம்பர் பாதி முதல் பிப்ரவரி பாதி வரை) : மற்ற பருவ காலங்களை விட குளிர்காலம் சிதம்பரம் நகரத்திற்கு விஜயம் செய்து ரசிக்க மிகவும் ஏற்றதாக உள்ளது.  இக்காலத்தில் அதிக குளிரும் இல்லாமல் வெப்பமும் இல்லாமல் இதமான சூழலுடன் இப்பகுதி காட்சியளிக்கிறது. எனவே பிரயாணம் மற்றும் கோயில் தலங்களை சுற்றிப்பார்ப்பது போன்றவற்றை பயணிகள் சிரமமில்லாமல் அனுபவிக்கலாம்.