Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சிக்பல்லாபூர் » வானிலை

சிக்பல்லாபூர் வானிலை

அக்டோபரிலிருந்து மார்ச் மாதம் வரையிலான இடைப்பட்ட காலமே சிக்பல்லாபூருக்கு பயணம் மேற்கொள்ள உகந்த காலம் ஆகும்.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை) : சிக்பல்லாபூர் பகுதி கோடைக்காலத்தில் மிக உஷ்ணத்துடன் அசௌகரியத்தை தரும் விதத்தில் உள்ளது. பகலில் வெப்பநிலை அதிகபட்சமாக 40℃ என்ற அளவிலும், குறைந்த பட்ச வெப்பநிலையாக சுமார் 22℃ என்ற அளவிலும் காணப்படுகிறது. பருவநிலை அசௌகரியமாக இருக்கும் இக்காலத்தில் பயணிகள் சிக்பல்லாபூர் பகுதிக்கு விஜயம் செய்வதை தவிர்க்கின்றனர்.

மழைக்காலம்

(ஜூன் முதல் ஆகஸ்ட் வரை) : தென்மேற்கு பருவக்காற்றின் மூலமாக சிக்பல்லாபூர் பகுதி தொடர்ச்சியற்ற மழைப்பொழிவை இக்காலத்தில் பெறுகிறது. உஷ்ணம் குறைந்து காணப்பட்டாலும் மழைக்காலத்தில் ஊர் சுற்றிப்பார்ப்பதும் ஸ்தலங்களுக்கு விஜயம் செய்வதும் சிரமமான ஒன்றாகும்.

குளிர்காலம்

(டிசம்பர் முதல் ஜனவரி வரை) : சிக்பல்லாபூர் பகுதி குளிர்காலத்தின்போது மிக இனிமையான சூழல் மற்றும் மிதமான உஷ்ணத்துடன் காணப்படுகிறது. அச்சமயம் வெப்பநிலை 19℃ - 32℃ என்ற அளவில் உள்ளது.