Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சில்கா » வானிலை

சில்கா வானிலை

கோடைகாலம்

சில்காவில் கோடைக்காலம் வெதுவெதுப்பாக இருக்கும். இங்கு கோடைக்காலம் நான்கு மாதங்களுக்கு, அதாவது மார்ச் முதல் ஜூன் வரை நீடிக்கும். இக்காலத்தில் அதிகபட்ச தட்ப வெப்பநிலை 45° செல்சியசாகவும் குறைந்தபட்ச தட்ப வெப்பநிலை 19° செல்சியசாகவும் விளங்கும். இந்நேரத்தில் இந்த இடத்தின் ஈரப்பதமும் அதிகமாக இருக்கும்.

மழைக்காலம்

ஜூலை மாதம் இங்கு தொடங்கும் மழைக்காலம் அக்டோபர் வரை நீடிக்கும். தென் மேற்கு பருவக்காற்றினால் இங்கே இடைவிடாத மழை பெய்யக்கூடும். இருப்பினும் அக்டோபர் மாதத்தில் மழை மெதுவாக குறைய ஆரம்பிக்கும். இக்காலத்தில் இங்கு சுற்றுலா வருவதும் உகந்தது அல்ல.

குளிர்காலம்

குளிர் காலத்தில் இங்கு தட்ப வெப்பநிலை 4° செல்சியஸ் முதல் 22° செல்சியஸ் வரை நிலவுவதால் இந்த இடம் குளிர்ச்சியாக இருக்கும். அக்டோபர் மாதம் உணரப்படும் குளிர் காலத்தின் நடுக்கம் பிப்ரவரி கடைசி வரை நீடிக்கும். பகல் நேரத்தில் வானிலை இனிமையாக இருப்பதால் இங்குள்ள இடங்களை சுற்றிப் பார்க்க தோதாக இருக்கும்.