Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சித்தோர்கர் » வானிலை

சித்தோர்கர் வானிலை

சித்தோர்கர் நகரத்துக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ள உகந்த காலம் அக்டோபர் மற்றும் மார்ச் மாதத்துக்கு இடைப்பட்ட காலமாகும். இக்காலத்தில் பருவநிலை குளுமையாகவும் இனிமையாகவும் சுற்றுலாஸ்தலங்களை ரசிக்க ஏற்றதாகவும் உள்ளது.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை):சித்தோர்கர் பகுதி மார்ச் மாதத்தில் துவங்கி ஜூன் மாதம் வரை கோடைக்காலத்தை பெறுகிறது. வெப்பம் மிகவும் கடுமையாக உள்ள இக்காலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 23° C மற்றும் அதிகபட்ச வெப்பநிலையாக 45° C காணப்படுகிறது. மிக அசௌகரியான வெப்பம் காரணமாக சுற்றுலாப்பயணிகள் கோடைக்காலத்தில் சித்தோர்கருக்கு விஜயம் செய்வதைத் தவிர்க்கின்றனர்.

மழைக்காலம்

(ஜூன் முதல் செப்டம்பர் வரை):சித்தோர்கர் பிரதேசம் கடுமையான கோடைக்காலத்தை தொடர்ந்து நிம்மதியைத்தரும் மழைக்காலத்தைப் பெறுகிறது. அவ்வப்போது குறைந்த மழைப்பொழிவே காணப்படும் இக்காலத்தில் சராசரியாக 60 செ.மீ முதல் 80 செ.மீ வரையிலான மழையை இப்பகுதி பெறுகிறது.

குளிர்காலம்

(டிசம்பர் முதல் பிப்ரவரி வரை):குளிர்காலத்தில் சித்தோர்கர் பகுதியானது இனிமையான சுற்றுப்புறச்சூழலைக் கொண்டுள்ளது. இக்காலத்தில் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வெப்பநிலையாக 11° C யிலிருந்து 28° C வரை நிலவுகிறது.