Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சோப்தா » வானிலை

சோப்தா வானிலை

கோடைகள், மழைக்காலங்கள் ஆகிய இரண்டும் இங்கு செல்வதற்கு ஏற்ற காலகட்டங்களாகும்.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை): சோப்தாவில் கோடைகாலம் மார்ச் மாதத்தில் ஆரம்பித்து மே மாதம் வரை நீடிக்கின்றது. இச்சமயத்தில், இங்கு அதிகபட்ச மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலைகள் தலா 30 டிகிரி செல்சியஸாகவும், 10 டிகிரி செல்சியஸாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்காலத்தில் இங்கு வானிலை இதமாக இருப்பதினால், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருகின்றனர்.

மழைக்காலம்

(ஜூலை முதல் செப்டம்பர் வரை): ஜூலை மாதம் சோப்தாவில் ஆரம்பிக்கும் மழைக்காலம் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கிறது. இக்காலத்தில், இந்தப் பகுதி மிதமான மழைப்பொழிவைப் பெறுமாதலால் இங்கு வானிலை மிகவும் ரம்மியமாக இருக்கும். இக்காலத்தில் சோப்தா செல்ல திட்டமிடும் பயணிகள், மழைக்கான உடைகளை மறக்காமல் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

குளிர்காலம்

(நவம்பர் முதல் பிப்ரவரி வரை): சோப்தாவில் குளிர்காலம் நவம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் நிலவுகிறது. இந்த சமயத்தில், இங்கு அதிகபட்ச மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலைகள் தலா 15 டிகிரி செல்சியஸாகவும், -15 டிகிரி செல்சியஸாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. குளிர்காலத்தின் போது, இங்கு கடும் பனிப்பொழிவு இருக்கும். ஆகையினால், சுற்றுலாப் பயணிகள் இச்சமயத்தில் சோப்தாவுக்குச் செல்லாமலிருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.