Search
  • Follow NativePlanet
Share

குன்னூர்  - உறங்காத பள்ளத்தாக்குகள்!

21

குன்னூர்,பயணிகள் உள்ளத்தில் நீடித்து நிற்கும் ஒரு அபிப்ராயத்தை உண்டுபண்ணக் கூடிய ஒரு மலை வாசஸ்தலம் ஆகும். இவ்விடம் எளிமையான, மகிழ்ச்சிகரமான நினைவுகள் நிறைந்த குழைந்தப் பருவ ஞாபகங்களை நினைவுறுத்துகிறது. உலகப் புகழ் பெற்ற கோடை வாசஸ்தலமான உதகமண்டலத்திற்கு மிக அருகில் இருக்கும் இங்கு வந்தால் நீங்கள் ஆச்சரியத்தில் மெய்மறந்து போவீர்கள். கடல் மட்டத்திலிருந்து 1850 மீட்டர் உயரத்தில் உறங்கி வழியும் இந்த சிறிய நகரத்தின் சுற்றுச் சூழல்  உங்களை  உடனடியாக  காதலில் வீழ்த்துகிறது.  தனிப்பட்ட  மணத்திற்கும் சுவைக்கும்  பெயர் பெற்ற  நீலகிரி  தேயிலையின் உற்பத்திக்கு இவ்விடம் புகழ் பெற்றது.  

குன்னூர் நீலகிரி மாவட்டத்தில் உள்ள  நகராட்சிகளில் ஒன்றாகும்.இது ஊட்டியை தலைமையகமாக கொண்ட மாவட்ட ஆட்சி தலைவரின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. இங்கு பல ஊர்களில் இருந்து , சில சமயம் பல நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்து வந்த மக்கள் நிறைந்துள்ளனர்.

நீங்கள் குன்னூரில் எப்போது சென்று தங்கினாலும் சுற்றுலாப் பயணிகள் இல்லாமல் இருப்பதைக் காண இயலாது. பயணிகள்  குன்னூர் வரும் காலத்தைப்  பொருத்து மழைத் தூறல் அல்லது பெருமழை என வேறுபட்ட காட்சிகளோடு காணப்படுகிறது.

பயணிகளின் ஆர்ப்பாட்டத்தால் நிறைந்து வழிந்தாலும் அமைதியாக  காணப்படும் இவ்விடம் எப்போதும்  ஆள் நடமாட்டத்துடன்  காணப்படுவதால் உறங்கா பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது.

நீலகிரி மலை ரயில் : நீலகிரியின் இதயத்துக்குள் ஒரு பயணம்

நீலகிரி வரும் எந்த ஒரு பயணியும், எல்லாப் பயணிகளும், கண்டிப்பாகத் தவற விடக் கூடாத  ஒரு அனுபவம் குன்னூர் மற்றும் ஊட்டி வரை செல்லும் மலை ரயில் பயணம்.

யுனெஸ்கோவின் புள்ளிவிவரப்படி டார்ஜீலிங் மலை ரயில் பாதைக்கு  இணையான உலகப் பாரம்பரியம் மிக்க  பாதையாக இது கருதப் படுகிறது. உலகிலேயே மிகச் சில இடங்களில் மட்டுமே உள்ள மரத்தாலான அடுக்கு பற்சக்கர அமைப்பு இங்கு உள்ளது.

ஆங்கிலேயர்களால் அமைக்கப் பட்ட இந்தப்பாதையில் 1908 முதல் ரயில் சேவை தொடங்கப்பட்டது. மதராஸ் ரயில்வே அதிகாரத்திற்குட்பட்டது என்றாலும் இந்திய ரயில்வேயின் சேலம் பிரிவு மூலமாகவே இயக்கப் படுகிறது.

இன்னமும் இது நீராவி எஞ்சின் மூலமாகவே இயங்குகிறது. பணம் மற்றும் நேரத்தை சேமிக்கும் பொருட்டு டீசல் என்ஜினாக மாற்றும் திட்டங்களும் தீட்டப்பட்டு வருகின்றன.

நீலகிரி மலை ரயில் பாதையில் பயணம் செல்லாமல் குன்னூருக்குச் சென்ற பயணம் நிறைவுற்றதாக கருதப்படாது. மேட்டுப்பாளையத்தில் தொடங்கி மலைப்பாதை வழியாக குன்னூர் சென்று , பின்னர் ஊட்டிக்கு செல்கிறது . செல்லும் வழியில் இயற்கை அழகும் , மலைப்பூட்டும் காட்சிகளும்  பயணிகளைக் கட்டிப்போடும் திறன் வாய்ந்தவை.

தேயிலை மற்றும் சாக்லேட்டின் சுவை

குன்னூரின் பொருளாதாரம் பெரும்பாலும் தேயிலை வர்த்தகத்தை சார்ந்து இருக்கிறது. இங்கு வசிக்கும் மக்களில் பெரும்பாலானோர் தேயிலை பயிரிடுவது தயாரிப்பது மற்றும் விற்பனை செய்வது  ஆகியவற்றையே தங்களது வாழ்வாதாரமாக கொண்டிருக்கின்றனர்.

வீட்டில் தயாரிக்கப்பட்ட சாக்லேட் நீலகிரியின் சிறப்பு . குன்னூரும் இதற்கு விதி விலக்கல்ல. குன்னூரின் எந்தத் தெருவிலும் நீங்கள் இதைப் பெற இயலும். கண்டிப்பாக தவற விடக் கூடாத ஒன்று இந்த சாக்லேட்.

குன்னூர் தாவரவளர்ப்பு மற்றும் தோட்டக் கலைக்கு பெயர் பெற்றது . பல அரிய வகை ஆர்க்கிட்கள் மற்றும் பல வகைப் பூக்கள் இங்கு செடிகளாக வளர்க்கப்பட்டு விற்கப்படுகின்றன. உலகில் வேறெங்கிலும் காணக் கிடைக்காத அரிய வகைப் பூக்கள் இங்கு உள்ளது மன நிறைவான அனுபவத்தை தரும்.

மலைவாசஸ்தலம் ஆனதால் குன்னூர் இதன் காலநிலைக்குப் பெயர் பெற்றது. குளிர் காலங்கள் அதிகபட்ச குளிருடனும், கோடைக்காலங்கள் மிதமான தட்பவெப்பத்துடனும் காணப்படும்.

குன்னூர் பயணப்பட விரும்பும் பயணிகள் மழைக்காலத்தில் இதன் அருகில்  செல்லக் கூட ஆசைப்பட மாட்டார்கள். அதிக மழை மற்றும் தாங்க முடியாத குளிர் காணப்படும் என்பதால்  மழைக்காலங்களை தவிர்ப்பது சிறந்தது.

குன்னூரை அடைவது மிக எளிது. கோயம்புத்தூரில் இருந்து மேட்டுப்பாளையம் ரயிலில் சென்று, அங்கிருந்து குன்னூருக்கு நீலகிரி மலை ரயில் மூலமாகச் செல்லலாம்.

கோயம்புத்தூரில் இருந்து ஊட்டி செல்லும்  ஏறி வழியில் குன்னூரில் இறங்கிக் கொள்ளலாம். கோயம்புத்தூரில் இருந்து குன்னூர் செல்ல மூன்றரை மணி நேரம் பயணம் செய்ய வேண்டும்.

அழகிய காட்சிகள், சுற்றிப்பார்க்க பல இடங்கள், சாக்லேட்டுகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் இனிமையான காலநிலை போன்றவை குன்னூரை சுற்றுலாப் பயணிகள் மற்றும் தேனிலவுத்  தம்பதிகள் அதிகம் நாடி வரும் இடமாக செய்துள்ளது.

குன்னூர் சிறப்பு

குன்னூர் வானிலை

சிறந்த காலநிலை குன்னூர்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது குன்னூர்

  • சாலை வழியாக
    சாலை மார்க்கமாக குன்னூர் செல்ல எளிதான வழி மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் சாலை தான். வழியில் தான் குன்னூர் உள்ளது. கோயம்புத்தூர் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்திலும் செல்லலாம். அல்லது சொந்த வாகனத்திலும் இந்தப் பாதையில் செல்லலாம். மேட்டுப்பாளையத்தில் பேருந்தில் ஏறி குன்னூரில் இறங்கிக் கொள்ளலாம். மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு மலைப்பாதையில் ஏறிச் செல்ல மூன்று மணிநேரம் ஆகிறது. அரசுப்பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் தமிழகத்தின் அனைத்து பெரிய நகரங்களில் இருந்தும் குன்னூருக்கு செல்கின்றன. பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களில் இருந்து சொகுசுப்பேருந்து மற்றும் வோல்வோ பேருந்துகளும் செல்கின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    விமானப் பயணத்தோடு ஒப்பிடுகையில் ரயில் பயணம் மலிவானதாக இருக்கிறது. கோயம்புத்தூர் வரை ரயிலில் வந்து பின் அங்கிருந்து மேட்டுப்பாளையத்துக்கு ரயில் ஏறலாம். மேட்டுப்பாளையத்தில் இருந்து தான் நீலகிரி மலை ரயில் தொடங்குகிறது. இங்கிருந்து குன்னூருக்கு ரயிலேறலாம். ரயில் மலையேற்றத்தில் செல்லுவதால் கொஞ்சம் மெதுவாகச் செல்லலாம் . ஆனால் பயணமோ மறக்க இயலாததாக இருக்கும்.அருகில் உள்ள பெரிய ரயில் நிலையம் கோயம்புத்தூர் தான். இங்கிருந்து இந்தியாவின் அனைத்து பெரிய நகரங்களுக்கும் ரயில் செல்கிறது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    குன்னூர் அருகில் உள்ள விமான நிலையம் கோயம்புத்தூர் விமான நிலையம் தான். இது குன்னூரில் இருந்து 60 கி. மீ. தூரத்தில் உள்ளது. கோயம்புத்தூருக்கு விமானத்தில் வந்து அங்கிருந்து பேருந்து அல்லது வாடகை டாக்சி மூலம் குன்னூர் செல்லலாம். கோயம்புத்தூர் விமான நிலையத்தில் இருந்து தென்னிந்திய நகரங்களான சென்னை , பெங்களூரு ஆகியா இடங்களுக்கு விமானங்கள் செல்கின்றன. பயணிகள் பெங்களூரு மார்க்கமாக விமானத்தில் வருவதையே விரும்புகின்றனர். ஏனெனில் பெங்களூரில் இருந்து இங்கு சாலை மார்க்கமாக வர பத்து மணிநேரம் வரை ஆகும்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Mar,Fri
Check Out
30 Mar,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat