Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குன்னூர் » வானிலை

குன்னூர் வானிலை

மலை வாசஸ்தலமாக இருப்பதால் ஆண்டு முழுவதும் தட்பவெப்பம்  நன்றாகவே இருக்கிறது. கோடை காலம் சுற்றிப் பார்க்கவும் மழைப் பாதையில் பயணம் செய்யவும்  சரியான காலம்.  இயற்கையின் பசுமையான அழகைக் காண  விரும்புபவர்கள் மழைக் காலத்தில் வரலாம். இருப்பினும் கடுமையான மழை பொழியும் தருணங்களை தவிர்ப்பது நல்லது. அக்டோபர் மாதத்திலிருந்து பிப்ரவரி மாத இறுதி வரையான காலம் விடுமுறையை  கழிப்பதற்கும் தேநிலவுக்கும் சரியான காலம்.

கோடைகாலம்

குன்னூரில் கோடை காலம் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை காணப்படும். கோடையில் தட்பவெப்பம் பயணிகளை அசௌகரியப்படுத்தும் வகையில் இல்லாமல் மிதமாக இருக்கும். காலையில் குன்னூர் கண்ணுக்கினியதாகக் காட்சியளிக்கும். அதுவும் பள்ளத்தாக்கை காணும் வகையில் தங்கியிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். இந்த சமயத்தில் தட்பவெப்பம் 15 டிகிரி முதல் 25 டிகிரி வரை காணப்படும்.

மழைக்காலம்

பருவமழை குன்னூரில் ஜூன் மாதத்தில் தொடங்குகிறது. செப்டம்பர் மாதம் வரை இங்கு சீரான மழை நீடிக்கும். மழைக் காலத்தில் இவ்விடம் ஈரமாகக் காணப்படுவதால் அப்போது இங்கு வருவது பரிந்துரைக்கப்  படுவதில்லை. இருப்பினும் மழைக்காலத்தில்  மலைகளும் பள்ளத்தாக்குகளும் பச்சைப் போர்வை  போர்த்தியது போல்  பசுமையாகக் காட்சியளிக்கும்.

குளிர்காலம்

குளிர் காலம் குன்னூரில் நவம்பரில் இருந்து பிப்ரவரி வரை நீடிக்கிறது. ஆண்டின் குளிர்மிகுந்த சமயம் இதுவே. இந்த சமயத்தில்  தட்பவெப்பம் 10  டிகிரி வரை குறைந்து  காணப்படுகிறது. குளிரை விரும்புபவர்களுக்கு இதுவே இங்கு வர சிறந்த சமயமாகும். இருப்பினும் இந்த சமயத்தில் இங்கு வர  விரும்பினால் குளிர்காலத்துக்கான ஆடைகளையும்  எடுத்துக் கொள்ளவும்.