Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கோவளம் கடற்கரை » வானிலை

கோவளம் கடற்கரை வானிலை

கோவளத்தை சுற்றிப் பார்க்க சிறந்த பருவம் அக்டோபர் மற்றும் மார்ச் இடையே உள்ள நாட்கள். இந்தக் காலங்களில் வெப்பநிலை 10 முதல் 26 டிகிரி செல்சியஸ் வரை இருக்கிறது. பாய்மர படகு சாகஸத்தில் ஈடுபாடு கொண்ட எவரும் பாய்மர படகு போட்டி நடக்ககூடிய பிப்ரவரி மாதத்தில் இங்கு வருகை தருதல் வேண்டும். 

கோடைகாலம்

மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் கோவளத்தில் கோடைகாலமாகும். இந்த காலங்களில் வெப்ப நிலையானது மிக அதிகமாக காணப்படும். குறைந்தபட்சமாக 32 டிகிரி செல்சியஸில் இருந்து அதிக பட்சமாக 38 டிகிரி செல்சியஸ் அளவு வெப்ப நிலையானது உயரக்கூடும்.

மழைக்காலம்

கோவளத்தின் பருவமழை காலம் சற்று தாமதமாக ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்கள் இடையே  வருகிறது. இந்த காலகட்டத்தில் அடிக்கடி மழை பெய்து கொண்டிருப்பதால் வெப்ப நிலை குறைவாக காணப்படும்.

குளிர்காலம்

குளிர்காலம் அக்டோபர் மற்றும் பிப்ரவரிக்கு இடைப்பட்ட நாட்களில் வருகிறது. குளிர்காலத்தில் அதிகபட்ச வெப்ப நிலை 26 டிகிரி செல்சியஸ் ஆகவும் , குறைந்த வெப்ப நிலை 10 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கிறது.