கைநான்ஸ் 1993-ம் ஆண்டு லாகூரைச் சேர்ந்த டாக்டர்.N.R.தரம் வீர் என்பவரால் கட்டப்பட்டது. குடியிருக்கும் வீடாக இருந்த கைநான்ஸ் இன்று டல்ஹெளசி நகரின் பாரம்பரிய சின்னமாக இருக்கிறது.
புகழ் பெற்ற சுதந்திர போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், தனக்கு உடல் நிலை சரியில்லாமால் சிகிச்சையெடுத்துக் கொண்டிருந்த போது, இந்த வீட்டின் சொந்தக்காரராக இருந்த தரனாவீருடன் சுமார் 7 மாதங்கள் இங்கு தங்கியிருந்தார்.
இந்த கட்டிடத்தை கண்டு பிடிப்பது மிகவும் கடினமாக இருப்பதால், பெரும்பாலன சுற்றுலாப்பயணிகள் அதன் இருப்பிடத்தை அறிய முடிவதில்லை. இந்த இடத்தை கண்டுபிடிக்க எளிய வழி, 'கைநான்ஸ்' என்ற எழுத்துக்கள் சிறிய பலகையில் பொறிக்கப் பட்டிருக்கும் மரத்தை கண்டுபிடிப்பது தான். இந்த இடம் காந்தி சௌக்கில் இருந்து 50மீ தொலைவிலேயே உள்ளதால், இவ்விடத்தை நடந்து சென்று எளிதில் அடைந்திட முடியும்.



Click it and Unblock the Notifications