Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தமன் » வானிலை

தமன் வானிலை

செப்டம்பர் மாதம் முதல் மே மாதம் வரையிலான பருவமே இந்த நகரத்துக்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது.

கோடைகாலம்

தமன் நகரத்தில் மார்ச் முதல் மே வரை கோடைக்காலம் நீடிக்கிறது. வெப்பம் அதிகமாக காணப்பட்டாலும் அரபிக்கடலிலிருந்து வீசும் குளிர் காற்று வெப்பத்தை கணிசமாக தணிக்கிறது.

மழைக்காலம்

ஆகஸ்ட் மாதம் துவங்கி செப்டம்பர் வரை இங்கு மழைக்காலம் நீடிக்கிறது. மழைக்காலம் இந்நகரத்தை கோடை வெப்பத்தின் கடுமையிலிருந்து முழுதும் விடுவித்துவிடுகிறது. மிதமான மழைப்பொழிவுடன் கூடிய இனிமையான சூழலை இக்காலத்தில் அனுபவிக்கலாம்.

குளிர்காலம்

டிசம்பர் மாதம் தொடங்கி ஜனவரி வரை தமன் நகரம் குளிர்காலத்தை பெறுகிறது. இதுவே இந்த பழமையான நகருக்கு விஜயம் செய்ய ஏற்ற பருவமாகும். இக்காலத்தில் 10°C வரை வெப்பநிலை குறைந்து காணப்படுகிறது.