Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தண்டேலி » வானிலை

தண்டேலி வானிலை

அக்டோபரிலிருந்து மே மாதத்துக்கு இடைப்பட்ட காலம் தண்டேலிக்கு விஜயம் செய்ய உகந்த காலமாக கருதப்படுகிறது. மேலும் டிசம்பர் – மே மாதம் சுற்றிப்பார்க்க ஏற்றதாகவும், அக்டோபர் – நவம்பர் பறவைகளைப்பார்த்து மகிழ உகந்ததாகவும், மார்ச்- மே மாதங்கள் நீர் விளையாட்டுகளுக்கு உகந்ததாகவும் உள்ளது.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை): கோடைக்காலத்தில் தண்டேலி மிதமான குளுமையான சீதோஷ்ண நிலையை கொண்டுள்ளது. வெப்ப நிலை அதிகபட்சமாக பகலில் 330C  க்கு மேல் உயர்வதில்லை. இனிமையான பருவநிலை காரணமாக பயணிகள் இங்கு கோடைக்காலத்தில் விஜயம் செய்வதை விரும்புகின்றனர்.  

மழைக்காலம்

(ஜுன் முதல் செப்டம்பர் வரை) : மழைக்காலத்தில் தண்டேலி மிகக்கடுமையான மழைப்பொழிவைப்பெறுகின்றது. இக்காலத்தில் வெளியே ஊர் சுற்றிப்பார்ப்பது மிக சிரமம் என்பதால் மழைக்காலத்தில் தண்டேலிக்கு விஜயம் செய்வதை பயணிகள் தவிர்க்கின்றனர்.

குளிர்காலம்

(டிசம்பர் முதல் பிப்ரவரி வரை) : குளிர்காலத்தின்போது தண்டேலி பகுதியின் பருவநிலை மிக குளுமையாகவும் இனிமையாகவும் காணப்படுகிறது. வெப்ப நிலை சராசரியாக 260C  என்ற அளவில் உள்ளது. குளிர்காலமே தண்டேலி எனும் இந்த அழகிய சுற்றுலாஸ்தலத்துக்கு விஜயம் செய்ய ஏற்ற காலமாக உள்ளது.