Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » டான்டா » வானிலை

டான்டா வானிலை

டான்டாவின் வானிலை கோடைகாலத்தை  தவிர  மிகவும் மிதமானது. இங்கு கோடை காலம் மிகவும் வெப்பமாக உள்ளது. ஆனால் குளிர் மற்றும் பருவ மழைக்காலங்களில் மிதமான வானிலையே நிலவுவதால் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு நல்ல சுற்றுப்பயண அனுபவத்தை தருகிறது.

கோடைகாலம்

டான்டாவின் கோடைகாலம் மிகவும் வெப்பமாக வறண்டு காணப்படும். இங்கு  கோடை காலத்தின் அதிகபட்ச மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை முறையே 44 மற்றும் 23 டிகிரி செல்யியஸ் ஆகும். இங்கு மார்ச் மாதத்தில் தொடங்கும் கோடை காலம் ஜூன் வரை நீடிக்கிறது.

மழைக்காலம்

டான்டாவில் பெரும்பாலும் மிதமான அளவிலேயே மழை பொழிகிறது. எனினும் ஒரு சில வருடங்களில் சிறிது அதிக மழைப்பொழிவு காணப்படுகிறது. இங்கு ஜூன் இறுதியில் தொடங்கும் பருவமழை செப்டம்பர் வரை நீடிக்கிறது.

குளிர்காலம்

குளிர்காலத்தில் டான்டாவின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 36 மற்றும் 10 டிகிரியாக பதிவாகிறது. குளிர்காலமே இந்தப் பகுதிக்கு சுற்றுலா செல்ல உகந்த பருவம் ஆகும்.