Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » டேராடூன் » வானிலை

டேராடூன் வானிலை

வருடத்தில் எப்போது வேண்டுமானாலும் டேராடூன் மலைவாசஸ்தலத்துக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ளலாம். இருப்பினும் கடும் குளிர் நிலவும் ஜனவரி மாதத்தை பயணிகள் தவிர்ப்பது நல்லது. இம்மாதத்தில் கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது.

கோடைகாலம்

( மார்ச் முதல் ஜுன் மாதம் வரை) : டேராடூன்  பகுதியில் மார்ச் முதல் ஜுன் மாதம் வரை கோடைக்காலம் நிலவுகிறது. கோடைக்காலத்தின்போது இங்கு சராசரியாக 17°C  முதல் 35°C வரை வெப்பநிலை காணப்படும். கோடைக்காலம் டேராடூன்  நகருக்கு பயணம் செய்ய ஏற்ற பருவமாகவும் அறியப்படுகிறது. இப்பருவம் இப்பகுதியை சுற்றிப்பார்த்து ரசிப்பதற்கும் சாகசப்பொழுதுபோக்கு விளையாட்டுகளில் ஈடுபடவும் ஏற்றதாக உள்ளது.

மழைக்காலம்

( ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை) : டேராடூன்  பகுதியில் குறைவான அல்லது மிதமானது மழைப்பொழிவு காணப்படுகிறது.  ஜூலை தொடங்கி செப்டம்பர் மாதம் வரை இங்கு மழைக்காலம் நீடிக்கிறது. இக்காலத்தின் எங்கு பார்த்தாலும் பசுமையுடன் ரம்மியமாக இப்பகுதி காட்சியளிக்கின்றது.  

குளிர்காலம்

( டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை) : டேராடூன்  பகுதியில் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை குளிர்காலம் நீடிக்கிறது.  இக்காலத்தில் இப்பகுதியின் அதிகபட்ச வெப்பநிலை 22°C  ஆகவும் குறைந்தபட்சம் 3°C வரை இறங்கியும் காணப்படுகிறது. உச்சபட்ச குளிர்மாதங்களில் இங்கு கடும் பனிப்பொழிவும் நிலவுகிறது.