கத்தீட்ரல் சர்ச் ஆஃப் ரிடம்ஷன், டெல்லி

முகப்பு » சேரும் இடங்கள் » டெல்லி » ஈர்க்கும் இடங்கள் » கத்தீட்ரல் சர்ச் ஆஃப் ரிடம்ஷன்

புது டெல்லியிலுள்ள கத்தீட்ரல் சர்ச் ஆஃப் ரிடம்ஷன் எனும் பிரபலமான கிறித்துவ தேவாலயம் வைசிராய் சர்ஸ் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இந்தியாவின் மிக அழகான தேவாலயங்களில் ஒன்றாக கருதப்படும் இது பார்லிமெண்ட் ஹவுஸ் மற்றும் ராஷ்டிரபதி பவனுக்கு கிழக்குப்பகுதியில் அமைந்திருக்கிறது.

1927- 1935ம் ஆண்டுகளில் ஹென்றி மெட் என்பவரால் கட்டப்பட்ட இந்த தேவாலயம் காலனிய காலத்து கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. வட இந்திய கிறித்துவ தேவாலயங்களுக்கான தலைமைச்சபையாகவும் (டெல்லி டயோசிஸ்) இது இயங்குகிறது.

ஒரு பிறந்த நாள் கேக்கின் மீது மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்தாற்போன்ற வடிவத்தில் இந்த தேவாலயம் உருவாக்கப்பட்டிருக்கிறது. கடுமையான கோடையிலும் இதன் உட்பகுதி குளுமையாக இருக்கும்படியாக இதன் வடிவமைப்பு உருவாக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

காலனிய ஆட்சியின்போது இந்தியாவிலிருந்த ஆங்கிலேயர்களின் மதச்சடங்குகளை கவனித்துக்கொள்வதற்காக டி.ஆர்.டிக்ஸன் எனும் பாதிரியார் நியமிக்கப்பட்டபோது இந்த தேவாலயம் துவங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. தற்போதுள்ள இந்த தேவாலய மாளிகை அமைப்பு 1935ம் ஆண்டு முடிக்கப்பட்டது.

ஒரு அழகான பசுமையான தோட்டத்தின் நடுவே அமைந்திருக்கும் இந்த தேவாலயத்துக்குள் எந்த பாகுபாடுகளுமின்றி அனைவரும் சென்று வழிபடலாம்.

Please Wait while comments are loading...