வசிப்பிடங்கள் சார்ந்த சூழலியல் பிரச்சினைகளை ஆய்வு செய்யவும் ஆலோசிக்கவும் உதவும் ஒரு ஸ்தாபனமாக இந்த ‘இந்தியா ஹேபிடாட் செண்டர்’ எனும் மையம் இந்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டிருக்கிறது.
மனித குடியிருப்புகள், வசிப்பிடம் சார்ந்த சூழலியல் பிரச்சினைகள் தொடர்பாக புதிய தீர்வுகள் மற்றும் திட்டங்களை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த மையத்தில் அரசுசாரா தன்னார்வ அமைப்புகளையும், சூழலியல் ஆர்வலர்களையும் உறுப்பினர்களாக பங்கேற்க இந்திய அரசாங்கம் வரவேற்றுள்ளது. நிறுவனங்கள், அரசாங்கம் மற்றும் குடிமக்களிடையே ஒரு இணைப்புப்பாலமாக செயல்படும் நோக்கத்துடன் இந்த மையம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த மையத்தின் செயல்பாடுகளில் பங்கேற்க ஆர்வமுள்ள குடிமக்கள் அனைவரும் வரவேற்கப்படுகின்றனர்.
1993ம் ஆண்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இந்தியா ஹேபிடாட் செண்டர் (IHC) தனி நபர்களுக்கும் அரசு ஸ்தாபனங்களுக்கும் இடையே ஒரு இணைப்புக்கருவியாக செயல்பட்டு வருகிறது.
இந்த மையத்தில் பலவகையான கலைநிகழ்ச்சிகள் மற்றும் பொருளாதார மற்றும் சமூகப்பிரச்சினைகள் சார்ந்த உரை நிகழ்ச்சிகள் போன்றவை ஏற்பாடு செய்யப்படுகின்றன.
மேலும், அருங்காட்சியகங்கள், ஹோட்டல்கள், உணவகங்கள், திறந்தவெளிக்கூடங்கள், நூலகங்கள் போன்றவை இந்த வளாகத்தில் நவீன வசதிகளுடன் அமைக்கபட்டிருக்கின்றன.



Click it and Unblock the Notifications