Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தலாய் » வானிலை

தலாய் வானிலை

அக்டோபரில் இருந்து மார்ச் வரையிலான மழைக்காலத்திற்கும் குளிர்காலத்திற்கும் இடைப்பட்ட பருவத்தில் தலாய் செல்வதே சிறந்ததாக கருதப்படுகிறது. மழையும் கொட்டாமல், குளிரும் அதிக அளவில் இல்லாமல் சுற்றுலாவிற்கு ஏற்றதாக இப்பருவம் திகழ்கிறது. எனிமும் மெலிதான் கம்பளி ஆடைகளுடன் பயணப்படுவது உகந்தது.

கோடைகாலம்

மார்ச் முதல் ஜூலை வரை நீளும் கோடை காலத்தில் 36ல் இருந்து 28 டிகிரி வரை வானிலை மாறுபடுகிறது. வெப்பத்தை தாங்கக்கூடிய பயணிகள் கோடைகாலத்தில் இங்கு வரலாம். வெயிலில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வண்ணம் வருதல் அவசியம்.

மழைக்காலம்

மழைக்காலத்தில் தலாய் புதிய அழகுடன் விளங்குகிறது. ஆகஸ்ட் மாதம் துவங்கி அக்டோபர் வரை நீளும் மழைக்காலத்தில் 220செமீ வரை மழை பதிவாகிறது. இயற்கை அழகிற்காக அறியப்படும் தலாய், மழைக்காலத்தில் தன் அடர்ந்த காடுகளிலும், மலைகளிலும் புது உயிர் பாய்ச்சியதைப் போல் அழகாக தோற்றமளிக்கிறது.

குளிர்காலம்

அக்டோபர் இறுதியில் இருந்து ஃபிப்ரவரி வரை நிலவும் குளிர்காலத்தில் வானிலை 17டிகிரியில் இருந்து 6டிகிரி வரை மாறுபடுகிறது. வானிலை மேலும் குறையக்கூட வாய்ப்புள்ளதால் தேவையான உபகரணங்களுடன் வருதல் அவசியம்.